ஈ எம் பற்றி
ஈ எம் பற்றிஜப்பானிய தோட்டக்கலை விஞ்ஞானி டீரோஹைகா எனும் அறிஞர் 1986 ல் கண்டுபிடித்த இந்த அற்புத கலவையினை தமிழில் திறமிகு நுண்ணுயிரி என அழைக்கலாம்…80 வகையான நுண்ணுயிகளை தேர்வு செய்து அதனை திரவ வடிவத்தில் ஒருங்கிணைத்து செய்யப்படும் பழுப்பு நிறதிரவம் ஈ,எம். .
இக்கலவையில் ஏற்கனவே பிரபலமாக உள்ள அசோஸ்பைரில்லம்,அசட்டோபேக்டர்,
ஈ எம் 1 என அழைக்கப்படுவது தாய் திரவம்.இது 6 மாதம் வரை வைத்திருக்கலாம்.இதில் உள்ள நுண்ணுயிர்கள் உறக்க நிலையில் இருக்கும்.இதனை வெளியில் வாங்குவது எளிது.
உறக்க நிலையில் இருக்கும் இந்த மூலக்கரைசலை உயிருள்ள இரண்டாம் நிலை திரவமாக நாம் தயார் செய்ய வேண்டும்.இதன் பெயர் ஆக்டிவேட்டேட் ஈ.எம் திரவம்.
ஆக்டிவேட்டேட் ஈ எம் திரவம் எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
1.ஈ எம் 1 லிட்டர்
2.குளோரின் கலக்காத தண்ணீர்.. போர் தண்ணீர் நல்லது [ஆர். ஓ தண்ணீரும் தவிர்க்கவும்] 20 லிட்டர்
3.ரசாயனம் சேர்க்காத வெல்லம்…பனங்கருப்பட்டி மிக நல்லது…தனி கரும்புசாறும் பயன் படுத்தலாம் 1 கிலோ
செய்முறை.
ஒருகிலோ வெல்லத்தை நன்கு கரைத்து எடுக்கவும் ,இதற்கு நாம் ஏற்கனவே வைத்துள்ள தண்ணீரில் தேவையான அளவு பயன் படுத்தவும்.மீதம் உள்ள தண்ணீர் .,1 லிட்டர் ஈஎம்,அனைத்தையும்காற்றுபுக முடியாத பிளாஸ்டிக் பாத்திரத்தில் ஒரு வாரம் வைக்க வேண்டும்.அப்போது உறங்கும் நிலையில் உள்ள நுண்ணுயிர்கள் உயிர் பெற்று வளரத்துவங்கும்.அதன் எண்ணிக்கை பல மடங்குகளாகும்.இந்த செயலினால் பிளாஸ்டிக் கலனில் வாயு உருவாகும்.தினசரி அதன் மூடியை திறந்து அந்த வாயுவை வெளியேற்ற வேண்டும்.
பயன் படுத்தும் முறை
இந்த இரண்டாம் நிலை திரவத்தில் ஒரு லிட்டருக்கு 200 லிட்டர் தண்ணீர்கலந்து பயன் படுத்தலாம்.இது கால் நடை தீவன பயிர்களில் தெளித்தால் நல்ல வளர்ச்சி ஊக்கியாக பயன் படும்.தொழுவத்தில் தினசரி தெளித்து வந்தால் ஈக்கள், கொசு போன்றவைகளின் தொந்தரவு குறைக்கப்படும்.தொழுவத்தின் துர்நாற்றம் குறையும்
ஈஎம் பொக்காஷி எனும் தவிடு உணவு தயாரிக்கும் முறை,தேவையான அளவு தவிடு எடுத்துக்கொண்டு அதில் ஏ.ஈ.எம் எனும் இரண்டாம் நிலை திரவத்தை தவிடு புட்டு பதம் வரும் வரை கலந்து இதனை காற்றுப்புகாமல் பிளாஸ்டிக் பாயில் கட்டி வைக்க வேண்டும்.ஒருவாரம் சென்றபின் திறந்து பார்க்கும் போது மேல் மட்டத்தில் வெள்ளை நிறத்தில் பூசனம் படர்ந்திருக்கும். இது நல்ல பக்குவத்தை குறிக்கும் அறிகுறி.இதனை நிழலில் உலர்த்தி கோழி ஆடு மாடு போன்றவைகளுக்கு உணவாக கொடுக்கலாம்…
ஒருலிட்டர் தாய் திரவம் சுமார் 300 ரூபாய் வரும்.இதனை சுமார் ஆறு மாதம் வரை பயன் படுத்தலாம்.இரண்டாம் நிலை திரவத்தை 30 நாட்கள் வரை பயன் படுத்தலாம்.வாங்கியவுடன் 1 லிட்டர் தாய் திரவத்தையும் பயன் படுத்த வேண்டாம்.நம்முடைய தேவை பயன் பாட்டுக்கு ஏற்ப 100 மில்லி அல்லது 200 மில்லி தாய் திரவத்தை பயன் படுத்தி இரண்டாம் நிலை திரவம் தயார் செய்யுங்கள்..நம் தேவைக்கு ஏற்ப தொடர்ந்து இரண்டாம் நிலை திரவம் கிடைக்குமாறு திட்டமிடுங்கள்.
நான் எனது மண்ணில்லா தீவன வளர்ப்பிற்கும்,தொழுவத்தில் தெளிப்பதற்கும்.கோழிகளுக்கு குடிநீரில் கலப்பதற்கும் தொடர்ந்து பயன் படுத்துகின்றேன்..நல்ல பலன் தான் கொடுக்கின்றது…
E.m எங்கு கிடைக்கிறது எனக்கு வேண்டும்
ReplyDelete9003325300
இ.எம்.தயாரிப்பது எப்படி?
Deleteஇ.எம். என்கிற திறமி தயாரிப்பு இது, பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், நோய் விரட்டியாகவும் செயல்படுகிறது. ஒரு ஏக்கருக்கு தேவையான கலவை தயாரிக்கத் தேவைப்படும் பொருட்கள்...
பப்பாளி-1 கிலோ,
பரங்கி-1 கிலோ,
வாழைப்பழம்-1 கிலோ,
நாட்டுச்சர்க்கரை-1 கிலோ,
முட்டை-1
பழங்களைத் தோலோடு சேர்த்து சிறிதுசிறிதாக நறுக்கிக் கொள்ளவும். வாய் குறுகலான மண் அல்லது பிளாஸ்டிக் கேனில் இவற்றைப் போடவும். முட்டையை உடைத்து, ஓடுகளையும் சேர்த்து அதில் போட்டுவிடவும். இந்தக் கலவை முழ்கும் வரை தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
பிறகு, காற்று உள்ளே போகாமல் இறுக்கி மூடிவிடவும். 15 நாட்கள் கழித்து திறந்து பார்க்கும்போது கலவையின் மீது வெண்மையான நிறம் தோன்றியிருந்தால் இ.எம். நுண்ணுயிரிகள் வேகமாக வளர்கின்றன என்று அர்த்தம். அப்படி இல்லாவிட்டால், ஒரு கைப்பிடி நாட்டுச் சர்க்கரையை போட்டு மூடிவைத்து விடவும். அடுத்த 15-ம் நாள்...
அதாவது 30-ம் நாள் இ.எம் தயார். 10 லிட்டர் நீருடன் 500 மில்லி இ.எம். கலந்து தெளிக்கலாம்.
இதைத் தெளிப்பதால் இலைச்சுருட்டு நோய், மஞ்சள் நோய் போன்றவை கட்டுப்படுகின்றன. பஞ்சகவ்யா, அமுதக் கரைசல் போலவே இந்த இ.எம். திறமி நுண்ணுயிரியும் வளர்ச்சி ஊக்கியாகவும் செயல்படுகிறது. பாசனநீரில் கலந்துவிட்டாலே போதுமானது. ஒரு முறை தயாரித்தால்... ஆறு மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
E.m எங்கு கிடைக்கிறது எனக்கு வேண்டும்
ReplyDelete9003325300
This comment has been removed by the author.
ReplyDeleteதொடர்புக்கு: ஆரோவில் பகுதியில் உள்ள இகோ புரோ அமைப்பின் தொழில்நுட்ப வல்லுநர் சுமதி, 0413-262 2469
ReplyDeleteதொடர்புக்கு: ஆரோவில் பகுதியில் உள்ள இகோ புரோ அமைப்பின் தொழில்நுட்ப வல்லுநர் சுமதி, 0413-262 2469
ReplyDelete