December 17, 2014

ஊறுகாய் புல் தயாரிப்பு தமிழில்

ஊறுகாய் புல் தயாரிப்பு தமிழில்

ஊறுகாய் புல் தயாரிப்பு.

இதன் உழைப்பும் , வாழ்த்துகளும் சென்று சேரவேண்டிய இடம் எனது மரியாதைக்குரிய சகோதரர் திரு: ஊரோடி வீரகுமார் .

 மேல்நாடுகளிலும்,நம் நாட்டின் வடமேற்கு, மத்திய மாநிலங்களிலும் கால்நடை வளர்ப்போர்கள் பயன்படுத்தும் அளவிற்கு நம் தமிழக கால்நடை வளர்ப்போர்கள் சைலேஜ் என்று அழைக்கப்படும் பதனப்படுத்தப்பட்ட பச்சை புல் அல்லது ஊறுகாய் புல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில்லை

Bag silage 001 Bag silage 004 Bag silage 005 Bag silage 007 Bag silage 009 Bag silage 013 Bag silage 014 Bag silage 015 Bag silage 018
இதற்கு என்ன காரணம் என்ற கேள்வி நீண்ட காலமாகவே எனக்குள் இருந்துகொண்டே இருக்கிறது.மிகச் சமீபமாக வேளாண், கால்நடை வளர்ப்பு பணிச் சுமைகள் குறையவே….( ஆமாங்க .. விற்க முடியாத இரண்டு தொத்தல் பசுவும்…. வண்டிமாடும்தான் என்னுடையகால்நடைசெல்வவளம் ) எனது நேரத்தை ,சிந்தனையையும், செயலையும், என் சக குடியானவர்களுக்கு பயனுள்ள வகையில் செலவு செய்யலாமே எனும் எண்ணம் மேலோங்கியது




ஊறுகாய் புல் தயாரிப்பு - செய்முறை

1. மக்காசோளம் , சோளம்,கரும்பு தோகை, கம்பு , CO-3 மற்றும் CO-4 போன்றவை ஊறுகாய் புல் தயாரிக்க ஏற்றவையாகும்.

2. ஊறுகாய் புல் குழி - மேட்டுப்பாங்கான இடத்தில் மழை நீர் மற்றும் காற்று புகாவண்ணம் அமைக்கப்பட வேண்டும்.

3. அளவு - 1 மீ x 1மீ x 1மீ அளவு குழியில் 500 கிலோ தீவனப்பயிரை சேமிக்கலாம்.

4. குழி அமைக்க முடியாத இடங்களில் கோபுரம் போல சிமெண்டில் அமைத்து அதில் பதப்படுத்தி தயார் செய்யலாம்.

5. தீவனப்பயிர்களை பதப்படுத்த சேர்க்கவேண்டிய பொருள்கள் -- சர்க்கரை பாகு( 4 விழுக்காடு ) , அசிடிக் அமிலம் அல்லது சிட்ரிக் அமிலம் ( 1 % ) , தவிடு அல்லது சோளம் அல்லது கம்பு அல்லது மக்காசோளம் (5 %), சுண்ணாம்புத்தூள் ( 1 %).

6. பசுந்தீவனப் பயிர்களை பூ பூக்கும் தருணத்தில் அறுவடை செய்து ஈரப்பதம் 60 விழுக்காடு வரை உலர்த்த வேண்டும். அதாவது 3 முதல் 5 மணி நேரம் வரை வயலில் அப்படியே போட்டுவிடவேண்டும்.

7. ஊறுகாய் புல் குழி முதலில் வைக்கோலை சிறிதளவு பரப்பி விடவேண்டும்.

8. பசுந்தீவனப்பயிர்களை தீவன நறுக்கிகளை ( Chaff Cutter ) கொண்டு சிறு துண்டுகளாக நறுக்கி குழியில் இடவேண்டும்.

9. ஒவ்வொரு 2 அடிக்கும் நன்றாக மிதித்து காற்றை வெளியேற்றி விடவேண்டும்.மேலும் ஒவ்வொரு 2 அடிக்கும் பதப்படுத்த தேவையான பொருட்களை சரியான அளவில் நன்றாக சேர்க்கவேண்டும்.

10. குழியை 2 நாட்களுக்குள் நிரப்பிவிடவேண்டும்.

11. மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே செல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும்

12. நில மட்டத்திற்கு மேல் 5 - 6 அடி உயரம் வரை நிரப்பிய பின், பாலித்தீன் கொண்டு மூடி விடவேண்டும்.

13. இதன் மேல் சாணம் மற்றும் மண் கொண்டு காற்று புகாவண்ணம் பூசி மொழுகவேண்டும். இவற்றில் வெடிப்பு ஏற்பட்டால் சேறு அல்லது சாணம் கொண்டு பூசி காற்று உள்ளே புகுவதை தடுக்கவேண்டும். இல்லாவிட்டால் ஊறுகாய் புல் தீவனம் கெட்டுவிடும்.

14. 2 மாத காலத்தில் ஊறுகாய் புல் தீவனம் உபயோகத்திற்கு தயாராகிவிடும். தேவையானதை குழியின் ஒரு பகுதியிலிருந்து எடுக்கவேண்டும்.

15. ஒரு முறை குழியினை திறந்து விட்டால் எவ்வளவு விரைவில் உபயோகப்படுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பயன்படுத்தவேண்டும்

No comments:

Post a Comment