நாலு
நாளா எங்க வெள்ளாடுகளுக்கு வாய்ல புண்ணு. செரித்தான்னு மாட்டாஸ்பத்திரி
டாக்டருகிட்ட போயி சொன்னேன். அதுக்கு அவரு,
வெள்ளாடுகளுக்கு வாய்ல புண்ணு.
வாயி கழுவ ஊதா கலரு பவுடரும், (பொட்டாசியம் பெர்மாங்கனேட்) உள்ளுக்கு குடுக்க மஞ்ச கலரு மாத்திரையும் (அதுக்கு பேரு அவருக்கு மட்டும்தான் தெரியும்) குடுத்தாரு. அதுக்கு ஒன்னும் சொகப்படல. செரி வுடு நம்ப மெடிக்கல்ல கேக்கலாம்னு அங்க போனேன். அங்க அவரு, அண்ணே ஆடுக இந்த கிளைமேட்டுக்கு நெல மேச்சல் மேயும்போது புல்லுல இருக்குற கம்பளி பூச்சிய ஒரசிறும். அந்த கம்பளிபூச்சி மயிரு ஆட்டு வாயில அலர்ஜிய கொண்டாந்துரும். அதுக்கு இதுதான் மருந்துனு சொல்லி அவரு கல்லாவ கணமாக்கிட்டாரு. நான் கண்ட பலன் ஒன்னுமில்ல.
அதுவும் செரித்தான்னுட்டு கூட ஆடு மேய்க்க வார பெருசுகிட்ட இந்த வெவரத்த எல்லாம் சொன்னேன். அதுக்கு அது, இதுக்கு எதுக்குடா அங்கயெல்லாம் போன, தொட்டாங்கச்சிய எடுத்து உன் ஒண்ணுக்க உட்டு அதுல அடுப்பு சாம்பல கரச்சு ஆட்டு வாயில தடவி விடுடானு சொன்னாரு. ரெண்டு நாளா அததான் செஞ்சேன். அம்புட்டு புண்ணும் அகப்படவே இல்ல.உங்க ஆடுகளுக்கும் வாய்ப்புண்ணு வந்தா இதயே பண்ணி குணப்படுத்திக்குங்க.

No comments:
Post a Comment