December 23, 2014

நாட்டு கோழி வளர்க்கும் நண்பர்கள் கவனத்திற்கு ...

நாட்டு கோழி வளர்க்கும் நண்பர்கள் கவனத்திற்கு ...

இளம் கோழிக்குஞ்சுகளுக்கு நல்ல ஊட்டச்சத்து மிகுந்த தீவனம் கொடுத்தால் அதன் வளர்ச்சி விகிதம் 15 சதம் அதிகரிப்பதோடு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியும் வரும் என்பது ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை .
நல்ல தீவனம் செலவில்லாமல் கிடக்கும் உபாயம் .

1) பழைய மக்கிய மரத்துண்டு , பழைய துணி , ஓலை , மட்டை , நார் போன்ற பொருட்கலில் ஏதாவது ஒன்றை வாய் அகண்ட மண்பானையில் போட்டு அழுத்தி வைத்து சிறிதளவு நீர் தெளித்து மண் பாங்கான பகுதியில் கவிழ்த்தி வைக்கவும் . ஓரிரு நாட்களில் கரையான் உற்பத்தியாகிவிடும் .
(மழை பெய்யும் போதும் , எறும்புகள் உள்ள இடங்களிலும் ,பூச்சி கொல்லி தெளித்த இடங்களையும் தவிர்க்கவும் )

கரையான் கொழுப்புச்சத்து 45 % , புரதம் 36% கொண்டது , 600 cal எரிசக்தி கொண்டது

2) அசோலா உற்பத்தி செய்து கொடுக்கவும் . இது செலவில்லாத ஒரு தொழில் நுட்பம் .

3) சனிக்கிழமை தோறும் கால்நடை மருந்தகங்களில் கொழிக்கழிச்சல் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது , அதை பயன் படுத்தி கொள்ளவும் .

4) அங்கேயே பூச்சி மருந்தும் இலவசமாக கிடைக்கும் ,அதை பயன் படுத்தி கொள்ளவும் .

No comments:

Post a Comment