December 23, 2014

கால்நடைக்கான மூலிகை உருண்டை!

கால்நடைக்கான மூலிகை உருண்டை!

பிரண்டை-100 கிராம், சோற்றுக் கற்றாழை-200 கிராம், நெல்லிக்காய்-2, முருங்கைக் கீரை-100 கிராம், கீழாநெல்லி-100 கிராம், கரிசலாங்கண்ணி-100 கிராம், குப்பைமேனி-100 கிராம், வேப்பங்கொழுந்து-100 கிராம், பூண்டு-5 பல், சின்ன வெங்காயம்-5 ஆகியவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும்.

சீரகம்-20 கிராம், மிளகு-10 கிராம், மஞ்சள் தூள்-10 கிராம் ஆகியவற்றை ஒன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.

அரைத்தக் கலவை... இடித்தக் கலவை... இரண்டையும் ஒன்றாகக் கலந்து, அவற்றுடன் பனைவெல்லம்-200 கிராம் கலந்து சிறு சிறு உருண்டை பிடித்து, கல் உப்பில் தோய்த்து கொடுக்க வேண்டும். இது ஒரு மாட்டுக்கான அளவு. ஆடுகள் எனில்... ஐந்து ஆடுகளுக்குப் போதுமானதாக இருக்கும்

No comments:

Post a Comment