December 17, 2014

அசோலா.....சிலருக்கு கைவந்த கலை.....சிலருக்கு..புரியாத புதிர்

அசோலா.....சிலருக்கு கைவந்த கலை.....சிலருக்கு..புரியாத புதிர்

அதெல்லாம் ஒன்னுமில்லங்க...பாயவிரிச்சு தண்ணி ஊத்துனா அதுவா வளரும் என சிலரும்.....சார் வீண்முயற்சி,,நம்ம ஊருக்கு வரவே வராது என சிலரும் சொன்னார்கள்...இந்த இரண்டு தரப்பினருமே சரியான நபர்கள் இல்லை

ஒவ்வொரு வேளாண் தொழில் நுட்பத்திலும் சில சூட்சுமங்கள் இருக்கும். அதை கவனமாக புரிந்து கொள்பவர்கள் மட்டுமே வெற்றியாளர்கள்.
ஆகவே நண்பர்களே கவனாமாய் செய்தால் வராதது எதுவுமே இல்லை...நானும் பலமுறை அசோலா வளர்த்து தோற்றுள்ளேன்
இந்தமுறை கோழிகளுக்கு மாற்று உணவிற்காக வென்றே ஆகவேண்டிய கட்டாயம்

அசோலா வளர்ப்பில் கவனிக்க பட வேண்டியவை

1..சாக்கடை கலக்காத குளத்து வண்டல் அவசியம்
2.குளோரின் கலக்காத குடிப்பதற்கு ஏற்ற தண்ணீர் தேவை
3.அமோனியா நீக்கிய சாண கரைசல்
4.போர் குழிமண் அல்லது சூப்பர் பாஸ்பேட்
5.நிழல்
6.பிளாஸ்டிக் பாயை கெமிக்கல் இல்லாமல் கழுவ வேண்டும்
7.தினசரி தண்ணீரின் அளவு குறையாமல் பார்த்து கொள்ளவேண்டும்
8.அறுவடை முடிந்ததும் தினசரி சிறிது சாண கரைசல் கலந்து விடுங்கள்
9.மிகவும் அடர்த்தியாகும் வரை காத்து இருக்காதீர்கள்
10..உற்பத்தி குறைவது போல இருந்தால் அந்த படுக்கையை மாற்றி விட்டு புதிய படுக்கைக்கு அசோலாவை கொண்டு செல்லுங்கள்
இந்த பத்து கட்டளைகளை மறக்காமல் கடை பிடியுங்கள்...இதெல்லாம் செய்யாமலே எனக்கு சரியாத்தானே வருது என சிலர் சொல்லலாம்....அவர்களை இனி தவிர்த்து விடுங்கள்...அவர்கள் அடுத்தவர்கள் வளர்வதை விரும்பாதவர்கள்..சமூக விசபூச்சிகள்.....
கவனமாய் இருப்போம்....வெற்றி அடைவோம்

No comments:

Post a Comment