December 23, 2014

மீன் அமிலம் தயாரிக்க தேவையான பொருள்கள் :

கழுவு மீன் மற்றும் கழிவு நாட்டு சர்க்கரை சம அளவு எடுத்து , வாலியில் இட்டு, இரண்டையும் நன்றாக பிசைந்து மூடி வைக்க வேண்டும். 20 நாட்கள் கழித்து பார்த்தல் மீன் சேரித்து தேன் போன்று மாறி விடும். பின்னர் அதனுடன் 30 மிலிக்கு 10 லிட்டர் விதத்தில் கலந்து பயிர் மீது தெளிக்க வேண்டும்.
பயன்கள் : இயற்கை உரம் & பூச்சி விரட்டியாகப் பயன்படுகிறது. இந்த கலவை தெளிக்கும் போது செடியானது நன்கு பச்சைகொடுத்து வளர்கிறது.


 நன்றி : வானகம் வெளியீடு.
இயற்கை உரம் தாயாரிப்பு குறுந்தகடிலிருந்து சிறு பகுதி




பயன்படுத்தும் முறை:

இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம். பயிர்கள் புத்துணர்ச்சி அடைந்தது போல் 3 நாள்களில் செழித்து காணத் துவங்கும்.ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். தேவைப்படும் போது மீன் அமினோ அமிலத்தை எடுத்துக் கொண்டு பிளாஸ்டிக் வாளியை காற்று புகாமல் மூடி வைத்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகளிடமிருந்து இந்த திரவத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

மீன் அமிலம் நன்மைகள் என்ன ?

மீன் அமினோ அமிலம் என்பது ஒரு முக்கிய வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் தன்மை கொண்டது.

விவசாயிகள் தழைச்சத்துக்கு யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த அமிலத்தை பயன்படுத்தலாம்.மீன் அமினோ அமிலத்தை பூக்கும் மற்றும் காய்க்கும் தருணத்தில் பயன்படுத்தும் போது நன்றாக பூக்கும் மறறும் காய்க்கும் திறன் அதிகரிக்கும். இந்த அமிலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்புகளையோ, பக்கவிளைவுகளையோ ஏற்படுத்துவது கிடையாது.

எனவே விவசாயிகள் குறைந்த செலவில் அதிகளவு உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் மகசூல் பெற்று தரும் இயற்கை முறையிலான மீன் அமினோ அமிலத்தை தாங்களே தயாரித்து பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம்.

No comments:

Post a Comment