திருவண்ணாமலை கார்த்திகை கால்நடைச் சந்தை!
பண்டங்களையும், கால்நடைகளையும் பரிமாறிக்கொள்வதற்காக வாரச் சந்தைகள், மாதச்சந்தை, ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் திருவிழா சந்தை என பல்வேறு சந்தைகளை உருவாக்கி வைத்திருந்தனர் நம்முடைய முன்னோர்கள். நாகரிக வளர்ச்சியில் பண்ட பரிமாற்றங்கள், பணப்பரிமாற்றங்களாக மாறின. பணப்பரிமாற்றங்கள் இன்றைக்கு ’ஆன்லைன் பரிமாற்றங்களாக’ மாறியுள்ளன. இந்த மாற்றங்களில் பல சந்தைகள் சுவடுகள் இல்லாமல் மறைந்துப் போக… சில சந்தைகள் மட்டும் மிச்சங்களாகவும், எச்சங்களாகவும் நீடித்து நிற்கின்றன. அவைகளில் ஒன்றாக, ஆண்டுக்கு ஒருமுறை செயல்படுகிறது ’திருவண்ணாமலை திருக்கார்த்திகை கால்நடைச் சந்தை!’
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகைத் தீபத்தை முன்னிட்டு ஒருவாரக் காலம் நடத்தப்படும் கால்நடைச் சந்தைக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள், நூற்றுக்கும் மேற்பட்ட கறவை மாடுகள், இருநூறுக்கும் மேற்பட்ட குதிரைகள், குதிரை வண்டிகள், கால்நடை அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றுடன் இந்த ஆண்டு சந்தையும் களை கட்டியது.
1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வண்டிமாடு!
கார்த்திகை திருநாளில், கால்நடைச் சந்தையில் ’கிரிவலம்’ வந்தோம் என்று தெரிவித்த, திருவண்ணாமலை மாவட்டம், ஆணாய்பிறந்தான் கிராமத்தைச் சேர்ந்த குப்பன், ’’25 வருஷமா மாடுகள் வாங்கி வியாபாரம் பார்க்குறேன். மைசூர், திருப்பத்தூர், ஆந்திரானு பல ஊர்களில் இருந்து மாடுகளை வாங்கி விற்பனை செய்றேன். ஒவ்வொரு வருஷமும் ஒரு மாசத்துக்கு முன்ன இருந்தே மாடுகளை வாங்கிட்டு வந்து, திருவண்ணாமலை சந்தையில வியாபாரம் செய்றேன். இந்த வருஷம் 40 ஜோடி உழவு மாடுகள் கொண்டு வந்திருக்கேன். எல்லா மாடுகளும் உழவு செய்யுறதுக்கும், வண்டி இழுக்குறதுக்கும் பழக்கப்பட்ட மாடுகள். ஒரு ஜோடி மாடு 40 ஆயிரத்துல இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் வரைக்கும் விலை போகும். ஒரு வருஷ காளை கன்றுகள் ஜோடி 20 ஆயிரத்துல இருந்து 35 ஆயிரம் ரூபாய் வரைக்கும் விலை போகுது” என்றார்.
வேலூர் மாவட்டம், வீரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சின்னத்துரை,’’ எனக்கு 9 ஏக்கர் நிலம் இருக்கும். அதுல மஞ்சள், தென்னை, பருத்தி மாதிரியான பயிர்களை சாகுபடி செய்திருக்கேன். போன வருஷம் ஒரு ஜோடி மாடு வாங்கினேன். உழவு, வண்டி இழுக்கன்னு நல்லா வேலை செஞ்சது. ஆனா, கிணற்றுல தண்ணீர் இல்லாததால மாடுகளுக்கு தீவனம் கிடைக்கல. இந்த சந்தைக்கு மாட்டை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கேன். 65 ஆயிரம் ரூபாய் கிடைத்தால் மாட்டை கொடுத்திடுவேன்” என்றார்.
’பலே’ பசுமாடு!
கறவை மாடுகள் பற்றி பேசிய புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இருக்கும் மதகடிப்பட்டைச் சேர்ந்த வியாபாரி அருள், ’’விழுப்புரம், பாண்டிச்சேரி பகுதிகள்ல மாடுகளை வாங்கி வியாபாரம் செய்றேன். இந்த சந்தைக்கு, காலை-மாலை இரண்டு வேளைகளும் சேர்த்து 5 லிட்டர்ல இருந்து 25 லிட்டர் வரைக்கும் பால் கறக்குற மாடுகள் சந்தைக்கு விற்பனைக்கு வந்திருக்கு. கறவையை பொருத்து 20 ஆயிரத்துல இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் கறவை மாடுகள் விலை போகுது” என்றார்.
குஷியான குதிரைகள்!
ஜோலார்பேட்டையில் இருந்து குதிரை, ஆஸ்திரேலியா ஆடு ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த மலர்வாணன், ’’வித்தியாசமான பிராணிகளை வளர்ப்பு செய்றதுல எனக்கு ஆர்வம் அதிகம். அதனால, குதிரை, ஆஸ்திரேலியா ஆடு, நாய் இனங்கள் மாதிரியான பிராணிகளை வளர்ப்பு செய்றேன். ஆஸ்திரேலியா ஆடு ஒன்னு 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு கொண்டு வந்திருக்கேன். ’காட்டுவாடை’னு சொல்லப்படுற ஜாதிக்குதிரையும் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கேன். அந்தக் குதிரையோட விலை 2 லட்சம் ரூபாய். இந்த சந்தைக்கு மட்டக்குதிரைகள், ஜாதிக்குதிரைனு மொத்தம் 200 வந்திருக்கு. 50 குதிரை வண்டிகள் வந்திருக்கும். ஒவ்வொரு வண்டியும் 10 ஆயிரத்துல இருந்து 40 ஆயிரம் ரூபாய் வரைக்கு விலைக்கு ஏற்ற மாதிரி வண்டிகள் இருக்கு” என்றார்.
நாட்டு மாடுகளையும், சந்தையையும் காப்பாற்றுகள்!
திருவண்ணாமலை சந்தையை பற்றி பேசிய தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.டி.ராஜேந்திரன், ’’திருவண்ணாமலை சந்தை பல நூறு ஆண்டுகள் பழமையானது. தமிழ்நாட்டில் அந்தியூர் சந்தைக்கு அடுத்தப்படியாக நடத்தப்படும் திருவிழா சந்தை. இந்த சந்தை பிரபலமாக இருப்பதற்கு காரணம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொடிகட்டி பறந்த வண்டி சக்கரம் தயாரிப்பும், விவசாயமும்தான்.
கார்த்திகைத் தீபத்திருவிழா நேரத்தில் தமிழ்நாடு மட்டுமில்லாமல், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மாடுகளை வாங்கி செல்வதற்கும், விற்பனை செய்வதற்கும் இந்தச் சந்தை வசதியாக இருந்தது.
வண்டி இழுக்கவும், உழவுத் தொழிலுக்கும் மாடுகளின் தேவை அதிகமாக இருந்ததால்… நல்ல காளைகளைத் தேர்வு செய்து, அவைகளை உழவுக்கும், வண்டி இழுப்பதற்கும் பழக்கி பயன்படுத்தினர். இதனால், மாடுகளின் தேவையும் அதிகமாக இருந்தது சந்தையும் உயிரோட்டமாக இருந்தது.
’பசுமை புரட்சிக்கு’ பிறகு டிராக்டர் பயன்பாடுகள் அதிகரிக்கவும், உழவு மாடுகளின் பயன்பாடு குறையவும், தரமான நாட்டு மாடுகளும் குறைய ஆரம்பித்துவிட்டன. அப்படி இருந்தும், தமிழ்நாடு முழுவதும் மாடுகளை வாங்க வருவது, முழுமையான நாட்டு மாடுகளுக்காகத்தான். ஆகையால், நாட்டு மாடுகளைப் பாதுகாத்தால் இந்த சந்தையும் உயிரோட்டமாக இருக்கும்” என்றார்.
-காசி.வேம்பையன்

No comments:
Post a Comment