காய்கறிகளில் விஷம் - வீட்டுத்தோட்டம் ஒன்றே தீர்வு
============================== =====================
6350293180 பில்லியன் கிலோகிராம் அளவு கழிவு ஆண்டுதோறும் கடலில் கொட்டப்படுகிறது. கடல் மட்டுமின்றி ஆறு ஏரி குளங்கள் போன்ற அனைத்து நீர்நிலைகளிலும் சாக்கடை நீர், முறையே சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவு நீர் ,சாயப்பட்டறை ,தோல்பதனிடும் ஆலைகளின் கழிவு,இரசாயன கழிவு, மிக கடுமையான பக்க விளைவுகளை உண்டாக்கும் மருந்துபொருட்களின் கழிவு,தடைசெய்யப்பட்ட இரசாயனபூச்சி கொல்லி மருந்துகள் ஆகியன சென்றுக் கலக்கின்றன .இப்படி பட்ட கழிவுகள் கலந்த நீர்நிலைகள் மனிதர்கள் குடிக்கவோ விவசாயத்துக்கு பயன்படுத்தவோ தகுதியற்றவை .கழிவு நீரை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்துவதால் அதில் விளையும் பயிர் மற்றும் காய்கறிகள் பல பக்க விளைவுகள் உண்டாக்குகின்றன என அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .
முறையற்ற இரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டால் அதிக அளவு மக்கள் புற்றுநோய் மற்றும் மரபணு குறைபாடு போன்றவற்றால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் .
காசர்கோடு மற்றும் தக்க்ஷின் கனடா பகுதியில் தொடர்ந்து 20 ஆண்டுகள் வான் வழியாக தெளிக்கப்பட்ட எண்டோ சல்பானின் கொடூர விளைவுகளை அறிந்திருப்பீர்கள் ..!!பிறவி குறைபாடுகள் மரபணு குறைபாடுகள் ,புற்றுநோய் ,கருப்பை சம்பந்தமான நோய்கள் ,சரும நோய்கள் என மனதாலும் உடலாலும் அங்கு பிறக்கும் பிள்ளைகளும் அவதிப்பட்டதை மறக்கவோ மறுக்கவோ முடியாது . கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல பல குழந்தைகளை உருக்குலைத்த பின் கேரளா 2005 ஆம் ஆண்டும் கர்நாடகா 2011 ஆம் ஆண்டும் என்டோசல்பான் பயன்பாட்டை தடை செய்தன !!ஆனாலும் இன்னும் பல இடங்களில் தடைசெயப்பட்ட இரசாயன பூச்சி கொல்லி மருந்துகள் கள்ள விற்பனையில் இருக்கின்றன என்பதற்கு பீஹார் மதிய உணவில் ,மோநோக்ரோடோபாஸ் இனால் மரணங்கள் சாட்சி .
வீட்டுத்தோட்டம் ஒன்றே தீர்வு
------------------------------ -------------------
ஒவ்வொரு பொருளிலும் இந்த மருந்து இருக்குமா இல்லை அந்த பூச்சி கொல்லி இருக்குமோ என்று ஆராய்ச்சி செய்ய தனி மனிதனால் இயலாது ..ஆகவேதான் வீட்டுத்தோட்டம் மாடித் தோட்டம் காலத்தின் கட்டாயம் ..
கேரளாவில் அங்கக வேளாண்மை ,இயற்கை ஆர்கானிக் உணவு பொருட்களை வீட்டில் வளர்க்க பயிற்சியும்,காய்கறி தாவரங்களை கவனிக்கும் முறைகள் அதற்கான தேவையான விதை ,செடி வளர்க்க நாற்று பைகள் ஆகியவற்றையும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அளிக்கிறார்கள் .
கொச்சி அருகே முண்டம்வெளி பகுதியை சார்ந்த விவசாயத்துறை அதிகாரி ஜான் ஷெர்ரி மாடிதோட்டத்தில் ஐம்பது பைகளில் காய்கறி தோட்டமமைத்து வெற்றியும் கண்டுள்ளார் .இசெடிகளுக்கு தேவையான இயற்கை உரத்தினையும் தானே
வீட்டில் தயாரித்துள்ளார் ..
எளிய முறையில் உரம் தயாரிப்பு ..
1.. மாட்டு சாண குழம்பு உரக்கலவை .
நிலக் கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, எலும்பு எரு , மாட்டு சாணம் ஆகிய அனைத்தையும் தலா ஒரு கிலோ தேவை. இவற்றை ஒரு பெரிய கலனில் இட்டு தண்ணீர் மற்றும் கோமியம் சேர்த்து கலந்து கலனின் வாய் பகுதியை நன்கு மூடி வைக்க வேண்டும் .இக்கலவை நொதிக்க நான்கைந்து நாட்கள் ஆகும்.
ஐந்து நாட்களுக்கு பின்னர் ஒரு கோப்பை கலவையுடன் பத்து கோப்பை தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து நேரடியாக செடிகளின் வேர் பகுதியில் ஊற்ற வேண்டும் .
2, பாக்டீரியா பூச்சி கொல்லி
சூடோமொனாஸ் எனும் பாக்டீரியம் பவுடர் வடிவில் கடைகளில் கிடைக்கும் .
ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் அளவு கலந்து செடிகளின் மேல் தெளிக்கலாம். இதை நான்கு நாற்று பைகளுக்கு பயன்படுத்தலாம்
சூடோமோனஸ் கலந்து பயன்படுத்தினால் வளரும் செடிகளை பூச்சிகள் அண்டாது .
3,மீன் அமினோ அமிலம் உரம்
கடைகளில் கிடைக்கும் மீன் கழிவு மற்றும் வெல்லப்பாகு இரண்டையும் தலா ஒரு கிலோ சேர்த்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு டைட்டாக மூடி வைக்க வேண்டும். பதினைந்து நாட்கள் நொதித்தலுக்கு பின்னர் .இக்கலவையை வடிகட்டி அதில் இருந்து இரண்டு மில்லி லிட்டர் அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் கலந்து உரமாக பயன்படுத்த வேண்டும் .
பூக்கும் தாவரங்களுக்கு இவ்வுரம் மிக சிறந்தது .
4, அசாடரக்டின் /Azadaractin...
இது வேம்பிலிருந்து பெறப்படும் சாறு .
இது ஒரு சிறந்த பூச்சி கொல்லி ..இரண்டு மில்லி லிட்டர் சாறை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியில் இலை மற்றும் வேர் பகுதியில் தெளிப்பானால் தெளிக்க வேண்டும் ..
5, ..இதெல்லாம் போக சில வழிமுறைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
வளரும் செடிகளை அன்போடு பராமரிக்கவேண்டும்
நாற்று பைகளை போதிய இடைவெளி விட்டு வைக்க வேண்டும், பைகளை செங்கலின் மீது வைக்கலாம்.உரத்தை மாலை நேரங்களில் செடிகளுக்கு இட வேண்டும். .தினமும் காலைவேளையில் நீர்ப்பாய்ச்சி விட வேண்டும்
ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஷெரி தொடர்ந்து அதே நாற்று பைகளை பயன்படுத்தி வருகின்றார் ..
இவரது வழிகாட்டுதலால் சூரநிகரையில் 300 தோட்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன .இவரது குடும்பத்தினர் அனைவருமே இவருக்கு இந்த மாடிதோட்ட பராமரிப்பில் மற்றும் ஆலோசனை வழங்கும் விஷயத்தில் உறுதுணையாக உள்ளார்கள் .மேலதிக விவரங்களுக்கு அவரைத்தொடர்பு கொள்ள அணுகவும் ...9447185944..
மூலம் : தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்
தமிழில் மொழிபெயர்ப்பு : Mrs.Angel Pasumai Vidiyal
==============================

------------------------------

No comments:
Post a Comment