வாருங்கள் விவசாயிகளே... பதப்படுத்துவோம்.... பணம் பெருக்குவோம்!
வெறும் மூன்று ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருக்கும்
விவசாயி அவர்... விவசாயம் மட்டும்தான் அவருடைய முழுநேரத் தொழில்... இதை
வைத்துக் கொண்டே நான்கு கார், பெரிய பங்களா, டிராக்டர் என்று பெரும்
பணக்காரர் போல வசதி, வாய்ப்புகளோடு வாழ்கிறார்.
"நம்ம ஊர்லயெல்லாம் இதுக்கு வாய்ப்பே இல்லையே...!" என்றுதானே சொல்கிறீர்கள்?
டாக்டர்.
அழகுசுந்தரம் கூட அதைத்தான் சொல்கிறார். "நம் ஊரில் மட்டுமல்ல... நம்ம
நாட்டில் கூட இப்படி நினைத்துப் பார்க்க முடியாது. இங்கே, மூன்று ஏக்கர்
விவசாயியெல்லாம் கடைசி வரை ஏழையாகத்தான் காலத்தை நகர்த்த முடியும். ஆனால்,
இஸ்ரேல் நாட்டில் 2 ஏக்கர், 3 ஏக்கர் வைத்துக் கொண்டு விவசாயம்
செய்பவர்கள்கூட கார், பங்களா என்று சகலவிதமான வசதிகளோடும் வலம்
வருகிறார்கள்..." என ஆதங்கம் பொங்கப் பேசும் அழகுசுந்தரம், இந்திய
பயிர்பதனத் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர்.
"இந்திய விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் அந்த அளவுக்கு
உயராததற்குக் காரணம்... விளைபொருட்கள் வீணாக்கப்படுவதுதான். இந்தியாவில்
உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்கள் முழுமையாக நுகர்வோரைச்
சென்றடைவதில்லை. அறுவடைக்குப் பின் பல்வேறு காரணங்களால், ஏராளமான
விளைபொருட்களை நாம் இழக்கிறோம். இதனால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு
ஏற்படுவதோடு நாட்டில் உணவுப் பொருள் பற்றாக்குறையும் நிலவுகிறது.
விளைபொருட்களைப் பதப்படுத்தி நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்துவதன்
மூலமாகவும், மதிப்புக் கூட்டுதல் மூலமாகவும் இந்த இழப்புகளைத் தடுத்துவிட
முடியும். இதன் மூலமாக விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படுவதோடு,
உணவுப் பொருள் பற்றாக்குறை என்பதையும் எளிதாகப் போக்க முடியும்" என
உறுதிபடச் சொல்கிறார் அழகுசுந்தரம்.
தஞ்சாவூரில்,
புதுக்கோட்டை செல்லும் சாலையில்தான் அமைந்திருக்கிறது இவரின் அலுவலகம்.
பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பத்தில் நன்கு
அனுபவம் பெற்ற அழகுசுந்தரம், தாய்லாந்து, நாட்டில் உள்ள ஆசிய தொழில்நுட்பக்
கழகத்தில் முதுகலை பட்டமும், கனடா நாட்டில் உள்ள மானி டோபா
பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றதோடு அதே பல்கலைக்கழகத்தில்
பேராசிரியராகவும் பணியாற்றி யுள்ளார். கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில்
பேராசிரிய ராக பல ஆண்டுகள் பணியாற்றி யிருக்கும் இவர், அறுவடைக்குப்
பிந்தைய தொழில்நுட்பத் துறை யில் சிறப்பாக பணியாற்றியதைப் பாராட்டி,
1995-ம் ஆண்டு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், விருது வழங்கி கௌர
வித்திருக்கிறது.
பெருமையும் சிறுமையும்!
"உணவு
உற்பத்தியில் படுவே கமான வளர்ச்சி கண்ட நம் நாடு, உலக நாடுகளுக்கெல்லாம்
முன்னோடியாகத் திகழ்கிறது. உலகின் மொத்த உணவு உற் பத்தியில், இந்தியா
மூன்றாவது இடம் வகிக்கிறது. தானிய உற் பத்தியில் நான்கு மற்றும் ஐந்தா வது
இடத்தையும், காய்கறிகள் மற்றும் பழங்கள் உற்பத்தியில் முதல் மற்றும்
இரண்டாவது இடத்தையும் மாறி மாறி தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்.. இது
உண்மையிலேயே பெரு மைக்குரிய விஷயம்தான். ஆனால், இதே நாட்டில்தான் 30%
அளவுக்கும் அதிகமானோர் தினம் தினம் பசியிலும், பட்டினியிலும்
வாடுகிறார்கள். மூன்றில் ஒரு பங்கு மக்கள், இரவு உணவு இல்லாமல் தூங்கச்
செல்கிறார்கள்.
ஆப்பிரிக்காவுக்கு
அடுத்தபடியாக இந்தியாவில்தான் ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளும்,
தாய்மார்களும் அதிகம் இருக்கிறார்கள். உலக அளவில் இத்தகையக் குறைபாடு
உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையில் 50% பேர் இந்தியாவில் உள்ளனர். இது
வேதனைக்குரியது. உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரமாவது
உயர்ந்திருக்கிறதா என்றால்... அதுவும் இல்லை. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும்
கடன் தொல்லை காரணமாகவே ஒன்றரை லட்சம் விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை
செய்து கொண்டு மாண்டிருக்கிறார்கள். ஏன் இந்த அவல நிலை?
ஆண்டுக்கு 55 ஆயிரம் கோடி ரூபாய் அம்போ!
உற்பத்தி
செய்யப்படும் உணவுப் பொருட்கள் முழுமையாக நுகர் வோரைச் சென்று சேர்வதில்லை.
இதனால் விவசாயிகளின் கடின உழைப்பும், முதலீட்டுச் செலவும் விரயமாகி,
வருவாய் இழப்பு அதிகரிக் கிறது. உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள்
முழுவதும் பணமாக மாற்றப்பட வேண்டும். ஆனால், அது கைகூடாமலே இருக்கிறது. உடன
டியாக விற்பனை செய்து, அதனை அவசர அவசரமாகச் சாப்பிட்டாக வேண்டும். உரிய
காலத்துக்குள் பயன்படுத்தவில்லை என்றால், உணவுப் பொருட்கள் கெட்டு,
குப்பைக்குப் போய்விடும். இது நமக்குத் தெரிந்தே நடக்கும் இழப்பு.
தெரியாமல் பல வகைகளில் இழப்பு ஏற்படுகிறது. விளைபொருட்களின் ஒரு சில
பகுதிகளை மட்டும் பயன்படுத்திவிட்டு, மற்றவைகளைப் பயன்படுத்தாமலே விட்டு
விடுகிறோம். அறுவடைக்குப் பின் ஏற்படும் இத்தகைய இழப்புகளை பட்டியலிட்டுக்
கொண்டே போகலாம். உற்பத்தி செய்யப்படும் தானியங்களில் குறைந்தபட்சம் 20%
முதல் 30% வரை இழக்கிறோம். காய்கறி மற்றும் பழங்களில் 25% முதல் 50%
பயன்படுத்தப்படாமலேயே விரயமாகிறது. இந்த வகையில் ஆண்டொன்றுக்கு 55 ஆயிரம்
கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. உணவுப் பொருட் களை தகுந்த முறையில்
பாதுகாத்து, பதப்படுத்தி, மதிப்புக் கூட்டினால் இழப்பைக் குறைக்கலாம்.
உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் நல்ல மதிப்பும் வரவேற்பும்
கிடைக்கச் செய்யலாம். இதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க
முடியும்" என்று ஆணித்தர மாக தன் வாதங்களை அடுக்கிய அழகுசுந்தரம், இஸ்ரேல்
நாட்டை துணைக்கு அழைத்துப் பேசினார்.
இஸ்ரேல்... ஓர் இனிய உதாரணம்!
"2003-ம்
வருஷம் இஸ்ரேல் நாட்டுக்குப் போயிருந்தேன். ஜோர்டான் நாட்டு எல்லை யில்
உள்ள பாலைவனப் பகுதி யில் ஒரு விவசாயியைச் சந்தித்தேன். அவருக்கு வெறும் 3
ஏக்கர் நிலம்தான் இருக்கிறது. அதுவும் பாறைப் பகுதி. ஜோர்டானில் இருந்து
மண் கொண்டு வந்து, 2 அடி உயரத்துக்கு மேடாக்கி, குடைமிளகாய் சாகுபடி செய்து
கொண்டிருந்தார். குளிர் காலத்தில் குளிர் கடுமையாக இருக்கும். வெயில்
காலத்தில் வெப்பம் கடுமையாக இருக்கும். இத்தனைச் சவால்கள் நிறைந்த அந்த
பூமியில் பசுமைக்குடில் (பாலி ஹவுஸ்) அமைத்து விவசாயம் செய்கிறார். இதன்
மூலம், 4 கார், டிராக்டர், பெரிய பங்களா என்று மிகவும் வசதி யோடு
வாழ்கிறார். இதற்குக் காரணம்... குடைமிள காயைப் பறித்து, மதிப்புக் கூட்டி
விற்பனை செய்வதுதான். உணவு எண்ணெய்களில் கிடைக்கும் மெழுகை குடைமிளகாய்
மீது பூசுகிறார். இதனால், குடைமிளகாய் நீண்ட நாட்களுக்கு
பாதுகாக்கப்படுகிறது.
பார்ப்பதற்கு அழகாகவும் செழிப்பாகவும்
காட்சியளிக்கிறது. இதனால் அந்த விவசாயிக்கு அதிக விலை கிடைப்பதோடு உற்பத்தி
செய்யப்பட்ட குடைமிளகாய் முழுவதை யும் விற்பனை செய்து விடுகிறார்.
அந்த நாட்டில்
இவரைப் போலவே பெரும் பாலான விவசாயிகள் வெறும் 2 அல்லது 3 ஏக்கர் நிலங்களில்
விவசாயம் செய்தே பெரும் பணக்காரர்களாக வாழ்கிறார்கள்" என்று உதாரணத் தைச்
சொன்னவர், பதப்படுத்தும் தொழில் ஒவ்வொரு நாட்டிலும் எப்படியிருக்கிறது என்
பதைப் பற்றி, தன்னுடைய அனுபவத்திலிருந்தே எடுத்துச் சொன்னார்.
இந்திய தேங்காய் வருவதில்லையே!
"பல ஆண்டுகள்
கனடாவில் இருந்தேன். அங்கு தேங்காய் கிடைக்காது. இலங்கை பிலிப்பைன்ஸ்,
இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து காய்ந்த தேங்காய் துருவலைத்தான்
இறக்குமதி செய்து பயன்படுத்துகிறார்கள். ஆனால், தேங்காய் உற்பத்தியில்
உலகில் மூன்றாவது இடம் வகிக்கும் இந்தியாவிலிருந்து தேங்காய் துருவல்
கனடாவுக்கு வரவில்லை.
டப்பாவில்
அடைக்கப்பட்ட ஒரே ஒரு முருங்கைக்காய்க்கு அமெரிக்காவில் 2 டாலர் விலை
கொடுத்து வாங்கியிருக்கிறேன். அன்றையச் சூழலில் இந்திய பணத்துக்கு 85
ரூபாய். அப் போது நம் ஊரில் ஒரு முருங்கைக்காயின் விலை வெறும் 20 பைசா. ஒரே
ஒரு முருங்கைக்காயை நான்கு, ஐந்து துண்டுகளாக நறுக்கி, உப்புக் கரைசல்
சேர்த்து டப்பாவில் அடைத்து சூடு படுத்தி விடுகிறார்கள். இவ்வாறு
பதப்படுத்தப்பட்ட முருங்கைக்காய் 6 முதல் 8 மாதங்கள் வரை கெடாமல்
இருக்கும்.
ஒரே ஒரு
வாழைப்பழத்தை டப்பாவில் அடைத்து பதப்படுத்தி 100 ரூபாய்க்கு விற்கிறார்கள்.
'ஊட்டச்சத்து உணவுகள்' என்ற பெயரில் ஒரு கேரட், ஒரு உருளைக்கிழங்கு
மற்றும் சிறிதளவு பட்டாணி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, வேக வைத்து, பேக்
செய்து விற்பனை செய் கிறார்கள். 100 கிராம் எடையுள்ள ஒரு பேக்கின் விலை 100
ரூபாய். இதனை அப்படியே சாப்பி டலாம். குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவு.
இப்படி பதப்படுத்தப்பட்ட, ஊட்டச்சத்து மிக்க உணவுகள் குறைந்தபட்சம் 6
மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்" என்று வெளிநாட்டு விஷயங்களைப் பட்டியலிட்ட
அழகுசுந்தரம்,
"வருக விவசாயிகளே... வருக!"
"தேங்காயைப்
பயன்படுத்தி தேங்காய் கிரீம், தேங்காய் பால், தேங்காய் துருவல், தேங்காய்
இனிப்புகள் போன்றவற்றைச் செய்யலாம். மாம் பழத்தை வெவ்வேறு வகைகளில்
மதிப்புக்கூட்டிய பொருட்களாக மாற்றி விதம்விதமாக விற்பனை செய்யலாம்.
பருப்புத் தோலில் நார்ச்சத்து அதிகம். அந்தத் தோலை பவுடராக்கி விற்பனை
செய்ய லாம். நெல் தவிட்டில் 20% புரோட்டின் இருக் கிறது. தவிட்டு எண்ணெய்
இதயத்துக்கு நல்லது. இதுபோல் இன்னும் பல வகைகளில் விவசாய விளைபொருட்களின்
மதிப்பைக் கூட்டி விற்பனை செய்ய முடியும். இத்தகைய முயற்சிகளில் நம்
விவசாயிகள் ஈடுபட வேண்டும். இதன் மூலம், அறுவடைக்குப் பிந்தைய இழப்பைத்
தவிர்க்க முடியும். இதற்காக எல்லா வகையிலும் உதவ நாங்கள் காத்திருக்கிறோம்.
இதுகுறித்த பயிற்சிக் கான கட்டணமும் குறைவுதான். விவசாயிகள் தாராளமாக
எங்களை அணுகலாம். வாருங்கள் விவசாயிகளே!" என அழைப்பும் விடுத்தார்.
தொடர்புக்கு இயக்குநர், இந்திய பயிர்பதனத் தொழில் நுட்பக்கழகம், தஞ்சாவூர். தொலைபேசி 04362-226676.
கூட்டுத் தானியங்களில் இருந்து சத்து மிகுந்த உணவு தயாரிக்கும் திட்டம் ஒன்றை விரைவில் அமல்படுத்த இருக்கிறது இந்திய பயிர்பதனத் தொழில்நுட்பக் கழகம். விவசாயிகளுக்கு நல்ல விலையும், பொதுமக்களுக்கு சத்தான உணவும் கிடைக்கச் செய்வதுதான் இத்திட்டத்தின் நோக்கம். அதாவது, நியாயமான விலை கிடைக்காத தினை, சாமை, கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை நல்ல விலை கொடுத்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப் போகிறார்கள். அதிலிருந்து சத்தான உணவு தயாரித்து, தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு வழங்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
பயிற்சிக்கு வாருங்கள்!
பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சிக்கு கட்டணம் 100 ரூபாய். மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட் களை விற்பனை செய்வதற்கான சந்தை வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்குகின்றனர். மதிப்புக் கூட்டப்படும் உணவுப் பொருட்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து கொள்வதற்கான திட்டம் குறித்து இந்த நிறுவனம் ஆய்வுகள் நடத்தி வருகிறது. விரைவில் இது நடை முறைக்கு வரவிருக்கிறது. உணவுப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் தொழிலில் ஈடுபடுபவர் களுக்கு நபார்டு உள்ளிட்ட வங்கிகள் கடன் வழங்கி வருகின்றன. மத்திய உணவுப் பதனீட்டுத் தொழில்கள் அமைச்சகம் ஏராளமான உதவிகள் செய்துவருகிறது. 50% மானியம் வழங்குகிறது.
தனிநபர்தான் என்றில்லை... ஒரு கிராமத்தில் உள்ள பல விவசாயிகள் சிறுசிறு குழுக்களாக இணைந்தும் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடலாம்.
No comments:
Post a Comment