பிரமிக்க வைக்கும் மூலிகைப் பண்ணை!
------------------------------ ---------------------------
இயற்கை முறையில் மூலிகைப் பண்ணையைப் பராமரித்து வரும் சிவகங்கை மாவட்டம், ஆவுடப் பொய்கை கிராமத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் சொக்கலிங்கத்தின் நாற்பது ஏக்கர் மூலிகைப் பண்ணையில்இயற்கையில் பல மூலிகைகள் முளைந்திருந்தன. அது போக, மருத்துவத்திற்குத் தேவையான பல மூலிகைகளைத் தேடித்தேடி வாங்கிட்டு வந்து வளர்த்திருக்கிறார் சொக்கலிங்கம்.
விஷத்திலேயே கொடிய விஷமான எட்டி, ஒத்தத் தலைவலியைக் குணப்படுத்தும் காஞ்சொறி, ஆஸ்துமாவை அழிக்கும் ஆஸ்துமா கொடி, சர்க்கரை நோயை குணப்படுத்தும் சர்க்கரைக் கொல்லி, இன்சுலின் செடிகளும் இங்கே இருக்கிறது. இந்த இன்சுலின் நாற்றுகளை நிறைய பண்ணைகளில் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் என்று விற்கிறார்கள். ஒரு செடியை வாங்கிக் கொண்டு வந்து அது வளர்ந்ததும் தண்டை ஒடித்து வைத்தாலே போதும், தன்னால் வளர்ந்துவிடும்.
அதேமாதிரி .. பிரம்பு, கருப்பு வெத்திலை, கருநெல்லி, கருநொச்சி, ரசவாதத்திற்குப் பயன்படும் செங்குமரி, வெள்ளை நாவல், திருவோடு மரம், பேய்கரும்பு, வல்லாரை, ஓரிதழ் தாமரை, முடக்காத்தான், ரணகள்ளி, நீர் நொச்சி, நீர் பிரம்மி, நீல மிளகாய், தவசி, முருங்கை, மான் செவி, கேசவர்த்தினி, கரிசலாங்கன்னி, தண்ணீர் விட்டான் கிழங்கு, ஆகாயகருடன், மதனகாமப்பூ, ஈஸ்வர மூலிகை என்று வகை வகையான அறிய மூலிகைகளையும் தேடிப்பிடித்துக் கொண்டுவந்து வளர்க்கிறேன் என்றார்.
கனகாம்பரத்தில் பச்சை கலரில் பூ வரும் செடி, இரண்டு வகை வல்லாரை, இரண்டு வகை மருதாணி, மூன்று வகை பொன்னாங்கன்னி, ஐந்து வகை வில்வம், ஐந்து வகை பிரண்டை, மூன்று வகை நாரத்தை, ஐந்து வகை எலுமிச்சை என்று ஒரே செடியில் இருக்கும் பல வகைகளும் இங்கே இருக்கிறது.
இருமல் உள்ளிட்ட நிறைய நோய்களை குணப்படுத்தும் சித்தரத்தை மட்டுமே தனியாக அரை ஏக்கரில் இருக்கிறது.
மொத்தமாக பார்த்தால்.. ஏறத்தாழ ஐநூறுக்கும் மேற்பட்ட மூலிகைகள் இங்கே இருக்கு. இந்த மூலிகைகளை வைத்து ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, புற்றுநோய், தோல் நோய் என்று ஆங்கில மருத்துவத்திற்கு சவால் விடும் எல்லா நோய்களையும் முழுவதுமாக குணப்படுத்த முடியும்.
இங்கிருக்கும் எந்தச்செடிக்கும் எந்த ஊட்டமும் கொடுப்பதில்லை. தன்னாலேயே வளர்கிறது. மூலிகையயோட குணமே அதுதான். காட்டில் உரம் போட்டா வளர்க்கிறார்கள் என்றார் சொக்கலிங்கம்.
பாம்பும் கீரியும் சண்டை போடும் போது, கீரி ஒரு இலையைச் சாப்பிடும். அதற்குப் பேர் கீரி புரண்டான் செடி, அது வேற ஒன்றும் கிடையாது. நம்ம காலடியில் கிடக்கும் சாதாரண சுண்ணாம்புக் கீரைதான்.
பொதுவாக, நாம செம்பருத்தி என்று சொல்லும் செடி அது கிடையாது. அதை ‘செம்பரத்தைப்பூ’ என்று சொல்லணும். செம்பருத்தி என்பது நாட்டுப்பருத்தியில் சிவப்பு கலரில் பூக்கும் ஒரு ரகம்’ என்றபடியே அந்தச் செடியைக் காண்பித்தார் சொக்கலிங்கம்.
எளிய மருத்துவக் குறிப்பு ஒன்றையும் சொன்னார்.
‘பல் சொத்தை, பல்லில் புழு என்று பல்டாக்டரிம் போய் ஐநூறு, ஆயிரம் என்று செலவழிப்பாங்க. அதற்கு ஒரு சுலபமான வைத்திய முறை இருக்கு. தும்பை இலைகளை ஒரு கைப்பிடி எடுத்துக்கிட்டு, நான்கைந்து சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வாயில் மென்று குதப்பி துப்பினால்… எல்லாம் சரியாயிடும்.
நிறைவாக, என்னோட மூலிகைத் தோட்டத்தை பார்க்கணும் என்று ஆசைப்படுபவர்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார்.
தொடர்புக்கு,
சொக்கலிங்கம், செல்போன் : 94439 – 19801.
thanks : https://www.facebook.com/photo .php?fbid=288336538008541&set= a.177351739107022.1073741825. 100004965911241&type=1&theater
நண்பர்களே அனைவருக்கும் பயன்படக்கூடிய இந்த தகவல்களை பலருக்கும் பகிருங்கள் ...நன்றி.
------------------------------

thanks : https://www.facebook.com/photo
நண்பர்களே அனைவருக்கும் பயன்படக்கூடிய இந்த தகவல்களை பலருக்கும் பகிருங்கள் ...நன்றி.
No comments:
Post a Comment