அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம்..
இந்த புத்தகம் தேவைப்படுவோர் அழைக்கவும் 8489401887.
VPP அல்லது Professional Couriers'யில் அனுப்பி வைக்கிறோம்.
1.பசியாற்றும் பாரம்பரியம்
க.ஸ்ரீதர்
ரூ.180
பழந்தமிழர் வீரத்துக்கும் உடல் வலிமைக்கும் அடிப்படைக் காரணம் அவர்கள் மேற்கொண்ட உணவு முறைகள்தான். சிறுதானியங்கள் பழந்தமிழர் வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்தன. அவர்கள் பயிர் வகைகளை நன்செய், புன்செய் என்ற இரு பிரிவுகளாகப் பிரித்துவைத்திருந்தனர். தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்கள் நன்செய். மானாவரி அல்லது குறைந்த நீர் தேவையுள்ள பயிர்கள் புன்செய். புன்செய்ப் பயிர்கள்தான் சிறுதானியங்கள். கம்பு, தினை, கேழ்வரகு, வரகு, குதிரைவாலி, சாமை, சோளம், காடைக்கண்ணி, உளுந்து போன்றவை உடலுக்குச் சக்தியையும், நோயற்ற வாழ்வையும் அருள்கின்றன. கம்பு உருண்டை, உளுத்தங் களி, கேப்பைக் களி போன்றவை சில சிறுதானிய உணவுகள். கம்பங் கூழ், வரகரிசிச் சோறு, கம்பு தோசை, தேன் கலந்த தினை மாவு போன்றவை முற்காலத்தில் தமிழர்களின் உணவுகள். ஆனால், தற்காலத்தில் சிறுதானியங்களைக் கொண்டு விதவிதமான உணவைச் சமைக்கும் பழக்கம் குன்றிவிட்டது. அரிசியைப் பயன்படுத்தும்போது, அதிலுள்ள உயிர்ச் சத்துகள் பலவிதங்களில் நீக்கப்பட்டுவிடுகின்றன. ஆனால், சிறுதானியங்களைப் பயன்படுத்தும்போது அதிலுள்ள உயிர்ச் சத்துகள் காக்கப்படுகின்றன. சிறுதானிய உணவுகள் ஆறு மாதக் குழந்தை முதல் முதியோர் வரை யாவரும் உண்ண உகந்தவை. கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்கள் குருதியில் உள்ள ட்ரைகிளிசிரைட்ஸ் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு இளைப்பைக் குறைக்க உதவுகின்றன. செரிமானம் எளிதில் நடைபெறுகிறது. இத்தகைய அற்புதங்கள் வாய்ந்த சிறுதானிய உணவுகளே சமுதாயத்தின் இப்போதையத் தேவை.
2.ஆறாம் திணை
மருத்துவர் கு.சிவராமன்
ரூ.150
நம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் காலத்தில் போட்டதில்லை. திரிதோஷ சமப் பொருட்கள் என்ற பெயருடன் ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், பெருங்காயம் எனும் எட்டுப் பொருட்கள்--தான் அந்தக் காலத்தில் சமையலுக்குத் தாளிக்கப் பயன்பட்டன. உணவுப் பொருட்களுக்கு இருக்கும் பிரத்யேகச் சுவையால் அவற்றுக்கு மருத்துவக் குணம் வருகிறது என்று சித்த, ஆயுர்வேத மருத்துவத் துறைகள் சொல்கின்றன. ஆனால், இப்போது மாறியுள்ள உணவு முறை நாவின் சுவைக்காக மட்டுமே ஒழிய, அதில் எந்த மருத்துவ குணமும் இல்லை. காய்கறிகளையும், சிறுதானியங்களையும் நாம் பயன்படுத்தினால் நோயற்ற வாழ்வு வாழலாம் என்கிறார் நூல் ஆசிரியர் மருத்துவர் கு.சிவராமன். சமையலுக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாத்திரங்களும், குளிர்சாதன பெட்டிகளும் சமுதாயத்துக்குக் கேடு விளைவிப்பவை என எச்சரிக்கிறார் நூலாசிரியர். ஆனால், அவசர உலகில் வாழ்பவர்களுக்கு மாற்றுஉணவு என்ன இருக்கிறது?. ‘கைப் பையில் கொஞ்சம் சிவப்-பரிசி அவலும் சின்னத் துண்டு பனை வெல்லமும் எடுத்துச் சென்றால், மாலைப் பசிக்கு உடனடி அவல் இனிப்புத் தயார். கால் மணி நேரம் ஊற-வைத்த அவலும் வெல்லமும் உடலுக்கு உறுதியும் கூடவே இரும்புச் சத்து, வைட்டமின் பி சத்தையும் தரும்... உடனடியாகச் செரிக்கக்கூடியது கேழ்வரகு லட்டு.

No comments:
Post a Comment