விதவிதமான ரகங்கள், கூடுதல் மகசூல் கொடுக்கும் உதயம் வாழை!
காசி. வேம்பையன்
படங்கள்: கே. குணசீலன், ரா. ராம்குமார்
களர், உவர் மண் வகைகளிலும், வறட்சியிலும் தாங்கி வளரக்கூடியது, கற்பூரவல்லி ரகம். மரங்கள் தடித்து வளர்வதுடன், உயரமாகவும், பெரிய இலைகளுடனும் காணப்படும். பழங்கள் நடுத்தர அளவுடன், பழுத்தாலும் காம்பு உதிராமல் நிலையாக இருக்கும். தோல், மிதமான கெட்டித்தன்மையுடன், சாம்பல் பூச்சுடன் காணப்படும். சதைப்பகுதி, சுவையுடன் சாறு மிகுந்து திடமாக, நறுமணத்துடன் காணப்படும். தார்கள் உருளை வடிவில் இருப்பதால், நெடுந்தூரப் பயணங்களுக்கு ஏற்றவை. ஜூஸ், உலர்பழங்கள், வாழைப்பூ சட்னி என தயாரிக்கலாம். இலை பயன்பாட்டுக்கும் இந்த ரகம் பயிரிடப் படுகிறது. இதன் வயது, 14 முதல் 16 மாதங்கள். ஒவ்வொரு தாரிலும் 10 முதல் 12 சீப்புகளுடன், 180 முதல் 200 பழங்கள் வரை இருக்கும். ஒவ்வொரு தாரும் 25 முதல் 28 கிலோ வரை எடை இருக்கும். இந்த ரகத்தில் 'பனாமா வாடல்நோய்’ தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆகையால், இந்த நோய் தாக்குதல் இல்லாத மரங்களில் இருந்து, கன்றுகளைத் தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும்.
காற்றில் சாயாத உதயம்!
திருச்சி, தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் 2005ம் ஆண்டு, 'உதயம் வாழை’ ரகம் வெளியிடப்பட்டது. கற்பூர வல்லியைப் போன்ற குணாதிசயம் கொண்ட ரகம் இது. ஆனால், கற்பூரவல்லியைவிட 40 சதவிகிதம் கூடுதல் மகசூல் கொடுக்கக்கூடியது. தார், உருளையாக இருப்பதால், நெடுந்தூரப் பயணங்களுக்கு ஏற்றது. இதன் பழங்களில் இருந்து, ஜூஸ், ஜாம், உலர்பழங்கள் போன்றவற்றைத் தயாரிக்கலாம். மரங்கள் உறுதியான தண்டுடன், உயரமாக இருக்கும். ஒவ்வொரு தாரிலும் 18 முதல் 20 சீப்புகளுடன், 250 முதல் 300 பழங்கள் வரை இருக்கும். இந்த ரகத்தில் ஒவ்வொரு தாரும் 35 முதல் 40 கிலோ எடை வரை இருக்கும். நன்றாக பராமரிப்பு செய்யும்பட்சத்தில், 50 கிலோ வரை எடை இருக்கும். பழுக்க ஆரம்பித்ததில் இருந்து, அதிகபட்சம் 7 நாட்கள் வரை மஞ்சள் நிறத்திலேயே இருக்கும். காற்று அதிகம் வீசும் பகுதிகளில், பயிரிட ஏற்ற ரகமிது. வாழை முடிக்கொத்து நோயை, எதிர்த்து வளரும் சக்தி கொண்டது. இந்த ரக வாழையும் களர் மற்றும் உவர் தன்மையைத் தாங்கி வளரும் தன்மை கொண்டவை.
ஊடுபயிருக்கு ஏற்ற பச்சநாடன்!
வறட்சியைத் தாங்கும் நெய் பூவன்!
கிராண்ட்9 (ஜி9) வாழை ரகத்துக்கு
அடுத்தப்படியான ஏற்றுமதிக்கு ஏற்ற ரகம், நெய் பூவன். 'ஏழரசி, ஞானிபூவன்,
ஏலக்கி பாலே, புட்டபாலே’ என்ற பல பெயர்கள் இருந்தாலும், பெரும்பாலும் 'நெய்
பூவன்’ என்றே அழைக்கிறார்கள். இந்த ரகம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய
மாநிலங்களில் அதிகமான அளவில் பயிரிடப்படுகிறது. எல்லா வகை மண்ணிலும் நன்றாக
வளர்வதுடன், வறட்சியைத் தாங்கியும் வளரும். கர்நாடகா மற்றும் கேரளாவில்
பாக்கு மரங்களுக்கு ஊடுபயிராக இ்்தை பயிரிடுகிறார்கள். இதன் வயது 13 முதல்
14 மாதங்கள். ஒவ்வொரு தாரிலும் 10 முதல் 12 சீப்புகளுடன், 120 முதல் 150
பழங்கள் வரை இருக்கும். ஒவ்வொரு தாரும் 15 முதல் 18 கிலோ எடை வரை
இருக்கும். பழங்கள் அதிக சுவையுடன் இருந்தாலும், காய்கள் கனிவதற்கு 5 முதல்
6 நாட்கள் ஆகும் என்பதால், நன்கு பழுத்த பழங்கள் கூட எளிதில்
உதிர்வதில்லை. இந்த ரக வாழையில் வாடல் நோய், நூற்புழு போன்றவை
தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், கன்று தேர்வு செய்யும்போது நோய்
தாக்காத கன்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
இந்த ரகத்தின் வயது 11 முதல் 12 மாதங்கள். தமிழ்நாட்டில் மாசிப்பட்டத்தில் நடவு செய்யலாம். இந்த ரகத்தில் மறுதாம்பு விடுவதில்லை. அதிகமான காரத்தன்மை கொண்ட நிலங்களில், இந்த ரகம் சரியாக வளராது. ஒவ்வொரு பழமும் 20 முதல் 25 சென்டி மீட்டர் நீளத்தில் இருக்கும். ஒவ்வொரு தாரும் 5 முதல் 6 சீப்புகளுடன், 40 முதல் 50 பழங்களுடன் இருக்கும். ஒவ்வொரு தாரும் 10 முதல் 12 கிலோ எடை இருக்கும். இந்த ரகத்தில் நூற்புழு, கிழங்கு கூன்வண்டு மற்றும் தண்டுத் துளைப்பான் தாக்குதல் அதிகமாக இருக்கும். இவற்றின் தாக்குதலைக் குறைக்க... பூச்சித் தாக்குதல் இல்லாத கிழங்குகளைத் தேர்வு செய்து, நடவு செய்ய வேண்டும்.
ரொபஸ்ட்டா, விருப்பாட்சி, செவ்வாழை, மொந்தன் போன்ற ரகங்களைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment