December 17, 2014

விதை பந்துகளை தயார் செய்து ஆங்காங்கே தூவி


விதை பந்துகளை தயார் செய்து ஆங்காங்கே தூவி









1938 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டை சேர்ந்த நுண்ணுயிரியல்
நிபுணர் FUKUOKA துவக்கி வைத்தது இந்த seed dumplings எனப்படும் முறை .

பூச்சி மருந்துகள் இரசாயன உரங்கள் மற்றும் கேடு விளைவிக்கும்
எந்த பொருளுமின்றி இயற்கை வேளாண்மை முறையை அறிமுகப்படுத்தியவரும் இவர்தான் .

பிறகு 1970 ஆம் ஆண்டுகளில் நியூயார்க் நகரத்தின் பசுமை ஆர்வலர்கள் கூட்டாக சேர்ந்து நகரின் பல இடங்களில் குறிப்பாக வறண்ட தரிசு,கவனிக்கப்படாத பகுதிகளில் பசுமை ஏற்படுத்த இதே முறையில் விதை பந்துகளை தயார் செய்து ஆங்காங்கே தூவி விட்டார்களாம் .

சில வாரங்களில் அவர்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது அவ்வாறு எறியப்பட்ட பந்துகளில் உள்ள விதைகள் முளைத்து அந்த இடமே பச்சை பசேலென காட்சியளித்தது .

பிறகு பலரும் அம்முறையை பின்பற்ற ஆரம்பித்தார்கள் எங்கெல்லாம் வறண்ட தரிசு நிலம் கானபட்டதோ அங்கு அழகிய வண்ண மலர் செடி விதைகளை தூவ நந்தவனாமகியது!

இந்த முறையால் சிறு பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் தேனீக்கள் ஆகியன பயன் பெறும் .

இப்பொழுது வெளி நாடுகளில் இந்த விதை பந்து உருண்டைகளை தயாரித்தும் விற்பனை செய்கிறார்கள் .

அதை வாங்கி ..நமக்கு விருப்பமான இடங்களில் கவண் கொண்டு எறியலாம் :)ஆட்கள் இல்லாத இடங்களில் மட்டும் முயற்சிக்கவும் ..

அல்லது கையால் வீசி எறிந்தாலும் போதுமானது .நிலத்தில் விழுந்த இந்த உருண்டைகலிலுள்ள களி மண் உருகி நிலத்தோடு ஒட்டும் மற்றும் அதிலுள்ள கலப்பு கூட்டு உரம் விதை வளர துணை புரியும் ..

உங்க வீட்டருகில் தரிசு நிலங்கள் இருந்தால் படத்தில் உள்ளபடி முயற்சித்து பாருங்கள் அல்லது தோட்டத்தின் ஒரு சிறு பகுதியில் இடம் இருந்தாலும் செய்யலாம் .

முக்கியம் ..விளை நிலங்கள் இருக்குமிடத்தில் இப்பந்துகளை பயன்படுத்தக்கூடாது .

லெமன் க்ராஸ் ,வண்ண மலர் விதைகள்,மூலிகை செடிகள் ,ஆகியவற்றை விதை உருண்டைகளாக்கி பயன்படுத்தலாம்

குறிப்பாக மகரந்த சேர்க்கைக்கு உதவும் தேனீக்களையும் வண்ணத்துபூச்சிகளையும் அழிவிலிருந்து காக்க இந்த விதை உருண்டை மிக மிக முக்கியமாக உதவும் ..

பட உதவி ..google

No comments:

Post a Comment