December 23, 2014

நாய்களுக்கு எந்த வயதில், என்னென்ன தடுப்பூசிகள் போட வேண்டும்?


நாய்களுக்கு எந்த வயதில், என்னென்ன தடுப்பூசிகள் போட வேண்டும்?

1. பெரும்பாலும் நமது கன்னி/சிப்பிப்பாறை/ராஜபாளையம் நாய்க்குட்டிகள் 35 முதல் 45 நாட்களுக்குள் தடுப்பூசி போடப்படமலயே தென் மாவட்டங்களில் இருந்து விற்கப்பட்டு , மற்ற மாவட்டங்களுக்கும் ,மாநிலங்களுக்கும் கொண்டுசெல்லப் படுகிறன. தடுப்பூசி போடாத நாய்குட்டிகளை அதிக தூரம் எடுத்து செல்லும் பொழுது ,(stress )ன் நாய்குட்டிகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, விடுவதால் டிஸ்டம்பர் மற்றும் பார்வோ வைரஸ் நோய்கள் எளிதாக தாக்கி விடும். பொதுவாக 45 வது நாள் (8 வது வாரம்தான்) தடுப்பூசி போடப்பட வேண்டிய நிலையிருந்தது,ஆனால் இப்பொழுது Nobivac Puppy DP எனும்– Nobivac Puppy DP தடுப்பூசி 4வது வாரம் (28வது நாள்) போடும்வகையில் தயாரிக்கபட்டு,கடந்த ஐந்து வருடங்களாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எனவே நாய்களை இனபெருக்கம்(breeding ) செய்யுது நாய்குட்டிக்களை விற்பனை செய்வதருக்கு முன் 4வது வாரம் (28வது நாள்) – Nobivac Puppy DP தடுப்பூசி போடுவதன் மூலம் டிஸ்டம்பர் மற்றும் பார்வோ எனும் குட்டிகளை,மழைக்காலங்களில் அதிகமாக தாக்கிக் கொல்லும் கொடிய நோயிகளை தடுக்கலாம். நான், நான்கு ஆண்டுகளுக்கு மேலாக Nobivac Puppy DP தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றேன், Nobivac Puppy DP போடப்பட்ட நாய்குட்டிகள் , டிஸ்டம்பர் மற்றும் பார்வோ வைரஸ் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை.

பெரும்பாலும் மெடிக்கல் ஸ்டோர்களில் விற்கப்படும் Nobivac Puppy DP தடுப்பூசிகளின் தரம் குறைய வாய்ப்புகள் உள்ளன,ஏன் என்றால் இரவு செல்லும்போது,மின்சார செலவு கட்டணத்தை குறைப்பதருக்காக,கடையை மூடும் பொழுது ,தடுப்பூசியை சேமித்து வைத்திருக்கும்,குளிர்சாதனப்பெட்டியை நிறுத்திவிடுவதால்,இதனால் தடுப்பூசியின் தரம் குறைந்துவிடும் ,எனவே தகுதி பெற்ற கால்நடை மருத்துவரின் உதவியுடன் தடுப்பூசி தரம் அறிந்து போடுவதே சரியான அணுகுமுறையாகும்.

• நாய்க்குட்டி பிறந்த 4வது வாரம் (28வது நாள்) – Nobivac Puppy DP தடுப்பூசி
• நாய்க்குட்டி பிறந்த 8வது வாரம் (56வது நாள்) –Nobivac DHPPi
• நாய்க்குட்டி பிறந்த 10 முதல் 12வது வாரம்(70 முதல் 90 நாட்களுக்குள்)= Nobivac DHPPi (Booster Dose)
• 12வது வாரம் (90வது நாள்) – Anti Rabies Vaccine (ARV)
• ஒவ்வொரு வருடமும் NOBIVAC DHPPi மற்றும் ARV ஆகிய இரண்டு தடுப்பூசிகளை கண்டிப்பாக போட வேண்டும்

1 .Nobivac Puppy DP (D for Distemper and P for parvo viral infection) – டிஸ்டம்பர் மற்றும் பார்வோ நோயைத் தடுக்கும்.
2. Nobivac DHPPi – இது கேனைன் டிஸ்டம்பர் (Canine Distemper), பார்வோ வைரஸ் (Parvo Viral Enteritis), இன்பக்ஸுயஸ் கேனைன் கெப்படைட்டிஸ் (Infectious Canine Hepatitis), கேனைன் பாரா இன்புளுயன்சா (Canine Parainfluenza) மற்றும் கெனல் காஃப் (Kennel Cough) ஐந்து கொடிய நோய்களைத் தடுக்கின்றது.
3. Nobivac Lepto – எலிக்காய்ச்சல் (Leptospirosis) நோயைத் தடுக்கின்றது.
4. ARV (Anti Rabies Vaccine) – வெறிநாய்க்கடியால் வெறிநோயை (Rabies) தடுக்கின்றது.

No comments:

Post a Comment