மூலநோய்க்கு துத்திக்கீரை (Tutthikkirai for piles)
துத்திக்கீரைதுத்திக்கீரைமூலநோய்க்கு துத்திக்கீரை(Tutthikkirai for piles) | |
துத்திக் கீரைகளில் கருந்துத்தி, சிறு
துத்தி, நிலத்துத்தி, பெருந்துத்தி என சில வகைகள் இருக்கின்றன. அனைத்து வகை
துத்தியும் ஒரே மாதிரியான மருத்துவ குணத்தை கொண்டுள்ளது.
துத்திக் கீரை உஷ்ணப் பிரதேசங்களில் நன்கு
பயிராகும். மொத்தம் 20 வகையான துத்தி இனங்கள் உள்ளன. துத்திக் கீரையின்
இலை, பூ, காய், முதலிய பாகங்கள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
துத்திக் கீரை இது சிறுநீரைப் பெருக்கும்,
மலத்தை இளக்கும். உடலுக்கு ஊட்டமளிக்கும். இக்கீரை குறிப்பிட்ட நோய்களைத்
தீர்க்கும் தன்மை கொண்டது. உடலுக்கு ஊட்டமளிப்பதால் நோய்
எதிர்ப்புச்சக்தியை உண்டாக்கிப் பல நோய்கள் வராமல் காக்கிறது.
மூலநோய், கட்டிகள், புண்கள், முழுமையாக
நிவாரணம் பெறு உதவுகின்றது. எலும்பு முறிவுக்குச் சிறந்த
மருந்தாகப்பயன்படுகிறது. துத்திக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல
பலன் அளிக்கும்.
|
No comments:
Post a Comment