February 15, 2017

நாட்டு கோழி விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது? லாபகரமானதா?

நாட்டு கோழி விற்பனை வாய்ப்பு எப்படி உள்ளது? லாபகரமானதா? 

நாட்டு கோழி விற்பனை வாய்ப்பு லாபகரமானதுதான், ஒருபுறம் நல்ல நாட்டுகோழி கிடைக்கவில்லை என்பது வாங்க நினைபவரின் கவலை, ஒருபுறம் கலபிடமில்லாத நாட்டுகோழி வளர்ப்பதில் சிரமம், கலபிடமில்லாத நாட்டுகோழி திறந்தவெளி இல் வளர்த்தல் சுமார் ஒருகிலோ எடை கிடைக்க ஆறுமாதகாலம் ஆகிறது, அக்காலங்களில் கோடை, குளிர்கால நோய் தாக்கல் வேறு அதிகம் 

சரி பண்ணையில் வைத்து வளர்க்கும்போது முடி உதிர்தல், சொட்டை, மூக்கு வெட்டுதல், கருவாடு கலந்த மற்றும் சில செயற்கை மருந்து கலந்த தீவனங்களை பயன்படுத்துவதாலும், வேகமான வளர்ச்சியாலும் சுவை இன்மை போன்ற காரணங்களால் விலைகுறைவு, ஒரே தரத்தில், ஒரே நேரத்தில் அதிகமான எண்ணிகையில் வளர்பதால் விற்பனை வாய்ப்பு குறைவு அதனால் நஷ்டமடைதல் போன்ற சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது
சரி இவற்றை எல்லாம் சரி செய்து லாபமடைய என்ன செய்வது ?

1. குறித்த எண்ணிகையில் கோழிகளை சில தரங்களாக பிரித்து வளருங்கள்
2. வாரா வாரம் சுமார் 5௦ கோழிகள் விற்பனைக்கு வரும் பொருட்டு கோழிகளை தகுதி வாரியாக வளருங்கள்
3. நாட்டுகோழி கறி கடைகளில் வாங்குபவர்கள் சுமார் 5௦௦ கிராம், அதிகம் 1 கிலோதான் அதிகம்பேர் கேட்பார்கள், அதனால் நீங்கள் சுமார் உயிர் எடை 1.3 கிலோ முதல் 1.5 கிலோ எடை கோழி விற்பனைக்கு ஏற்றவை
4. சுற்று வட்டாரங்களில் உள்ள வாரா, தின சந்தைகளுக்கு சென்று அங்குள்ள விற்பனை மற்றும் விலை நிலவரங்களை அறிந்துகொள்ளுங்கள்
5. நாட்டுகோழிகளை வயல் வெளிகளில் வளர்த்து சந்தையில் விற்பனை செய்தால் லாபம் உண்டு

No comments:

Post a Comment