February 15, 2017

அமெரிக்காவில் கோழிகளை பற்றி இது போல ஆராய்ச்சி ஒன்று செய்து இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் கோழிகளை பற்றி இது போல ஆராய்ச்சி ஒன்று செய்து இருக்கிறார்கள்.

ஆய்வு கூடத்தில் இரண்டு கொட்டில்களை அமைத்து, ஒரு கொட்டிலில் கழிவுகளை அப்புறப்படுத்த கிருமிநாசினியும், மற்றொன்றில் கோழி குப்பைகளையும் வைகோளையும் பரப்பி இரண்டிலும் சம வைத்துள்ள ஒரே எண்ணிக்கையில் கோழிகளை விட்டனர்,

சில வாரங்கள் கழித்து ஆராயும்போது குப்பையில் இருந்த கோழிகள் அரோக்யமுடனும் அதிக முட்டைகளும் இட்டன, கிருமிநாசினி தெளித்த கொட்டிலில் இருந்த கோழிகளில் வெகுவாக முட்டைகளின் எண்ணிக்கை குறைந்தன.

அதன் பிறகுதான், குப்பைகள் இருந்த கொட்டிலில் அதை கிளறிய கோழிகள் எதையோ உண்ணுகிறது என்பது தெரியவந்தது, மேலும் அதில் புரதம் மிகுந்த பூஞ்சைகளும் காளான்கள் உற்பத்தி ஆவதை கண்டுபிடித்தனர், தவிர அதில் பென்சிலின், septomysine குடும்பத்தை சேர்ந்த ஆன்டிபையோடேக் மருந்துகளும் பி-12 என்ற விட்டமினும் உற்பத்தி ஆவதை கண்டுபிடித்தனர்.

இதன் ஆன்டிபையோடேக் காரணமாக கோழிகளுக்கு நோய்கள் பரவவில்லை, விட்டமின் பி-12 இருந்த தால் முட்டை உற்பத்தி அதிகரித்தது, இந்த விட்டமின் ரத்த சோகையையும் குணப்படுத்துகிறது, மேலும் பாசு சாணத்தில் இதே விட்டமின் அதிகளிவில் இருப்பதால் அதை தின்ற கோழிகள் நன்கு வளர்ந்தன என்று அறிஞர்கள் ஆய்வு அறிக்கையில் எழுதினார்,கூடவே கிருமி நாசினி தெளிக்கப்படும் போது விட்டமின்கள் மற்றும் ஆன்டிபையோடேக் உற்பத்தி செய்யக்கூடிய உயிர்கள் கொள்ளப்படுகின்றன என்றும் அறிவித்தனர்.

இந்த பதிவு எங்கள் டைமன்ட் 1 குழுமத்தில் எனது தம்பி சிவா பதிவு செய்தது. நன்றி சிவா.
இவன்
Lion.ந.தமிழ்செல்வன் B.A
கடகநாத் எணும் கருங்கோழி பண்ணை.

No comments:

Post a Comment