கிளி மூக்கு வால் கோழிகள்
வாங்குபவர்கள் கவனிக்க வேண்டுபவை:
1. விலை குறைவாக கிடைக்கிறது என்று, 15 நாள்/1 மாதம் ஆனா குஞ்சுகளை எடுப்பதை தவிர்க்கவும். மூன்று மாதம் ஆனால்தான் கொஞ்சமாவது குஞ்சகளின் தரம் தெரியும்.
2. எடுக்கும் அனைத்து குஞ்சுகளும் ஒரே தரத்தில் வராது. 5 குஞ்சுகள் எடுத்தால், அதில் ஒன்று மிக சிறந்த தரத்துடனும், மூன்று அடுத்த தரத்திலும், ஒன்று சுமாரான தரத்திலும் கிடைக்கலாம்.. 3 மாத குஞ்சுகளாக எடுக்கையில் தரத்தை நாம் ஓரளவேனும் கணிக்க முடியும்.
3. Famous Breeder என்றால் நல்ல தரமான குஞ்சுகளாகவே தருவார் என்று
நம்புவது மடைமை.. அவர்களுக்கும் தெரியாமல் தவறு நேரலாம். ஆதலால், Famous Breeder என்பதால் மட்டும் கண்மூடித்தனமாக அவரிடம் குஞ்சுகளை வாங்குவதை தவிர்க்கவும்.
4. விற்கும் நபர் தொழில் சுத்தமாக இருக்காரா என்று பார்க்கவும். உதாரணம், நீங்கள் குஞ்சுகளை வாங்க பணம் அனுப்பி விடுகின்றீர்.. அதன் பின், கொஞ்சம் பணம் அதிகம் கிடைக்கிறது என்பதற்காக வேறு
ஒருவருக்கு நீங்கள் ஆசைப்பட்ட கோழியை விற்று விட்டு உங்களுக்கு பணத்தையோ வேறு பொருளையோ தர முன்வந்தால், அந்த நபரிடம் தொழில் செய்ய வேண்டாம்.
5. நீங்கள் வாங்கும் குஞ்சுகள் தரம் நன்றாக வராத பட்சத்தில், குஞ்சுகளை விற்றவர் அதனை மாற்றி தருவாரா/ திருப்பி எடுத்துக்கொண்டு பணத்தை தருவாரா என்பதனை முன்னமே அவருடன் பேசி கொள்ளவும். இது பின்னால் வரும் மனக்கசப்பினை தவிர்க்க உதவும்.
6. பெரும் பொருளை ஒரே நேரத்தில் முதலீடு செய்ய வேண்டாம்.
7. ஒரே நபரிடம் அனைத்து கோழிகளையும் எடுப்பதை தவிர்த்து,
பலரிடம் கொஞ்சம் கொஞ்சமாக கோழிகளை வாங்கவும்.
8. கோழியில் தவறு நேரும் பட்சத்தில், விற்றவரை குறை கூறாமல், மாற்றிக் கொடுக்கவோ, திருப்பி எடுக்கவோ கூறுங்கள்.
9. கோழிகளை விற்பவரின் தவறை திருத்திக்கொள்ள இரண்டாம் வாய்ப்பை நல்குங்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பொதுவில் அவரை குறை கூற வேண்டாம். அது அவரின் தொழிலை முடக்கிவிடும்.
ஆனால் அவர் உங்களுக்கு கோழிகளை மாற்றி தரவோ/பணத்தை தரவோ
சம்மதிக்காமல் உங்களை ஏமாற்ற முயல்கிறார் என்றால், அவரை நிச்சயம் பொதுவில் இழுத்து விடுவதில் தவறில்லை.இதனால்
வேறு பலர், அவரிடம் ஏமாறுவது தவிர்க்கப்படும்.
10. நண்பர் ஒருவர் கூறியது - Broiler கோழி தீவனம் போட்டு வளர்த்தல் தலை உருண்டு மூக்கு சின்னதா தெரியும்.. வாங்கி வந்து நம்ம கட்டுதரைல வெச்சு ஒரு மாசம் கம்பு, சோளம்னு போட்டா
தலை நீண்டு விடும். இத பத்தி தெரியாது.. அனுபவம் உள்ளவர்கள் கூறவும்.
11. இறுதியாக, நல்ல தரமான கோழிகளை நீங்கள் பெற்றால், கொடுத்தவரை பற்றி கொஞ்சமேனும் எழுதுங்கள்.. அவர்களுக்கு
அது நல்ல தொழில் முன்னேற்றத்தை தரும்.
12. வயதான கோழிகள் வாங்குபவர்கள், அந்த கோழியின் குஞ்சுகளின் தரத்தை தெரிந்து கொண்டு வாங்கவும். விலை குறைவாக இருக்கிறதென்று வாங்க வேண்டாம். மேலும், வயதான கோழிகள்
எத்துனை நாட்கள் உங்கள் பண்ணையில் தாங்கும் என்பதுவும் தெரியாது.
13. Breederரிடம் உள்ள வயதான கோழிகள் பெரும்பாலும் மனிதர்களுக்கு
பலக்கப்பட்டவையாகவே இருக்கும்... அவர்கள் கோழிகளையும் குஞ்சுகளையும் பாதுகாப்பான சூழலில்(கூண்டில்) வைத்து வளர்த்திருப்பார். ஆதலால் அவைகளால் பருந்து/விசாலி போன்றவை
தாக்கும்போது வேகமாக ஓடவோ, பறந்து தாக்கவோ முடியாது.
14. Breederரிடம் உள்ள வயதான கோழிகள் பெரும்பாலும் open space வளர்ப்புக்கு ஏற்றதல்ல... ஆதலால் வயதான கோழிகள் வாங்குபவர்கள், அவற்றை பாதுகாக்க, நல்ல கூண்டு மற்றும் வேலி முதலியவைகளை
செய்து பாதுகாப்பான சூழலை உருவாக்கி கொண்டு கோழிகளை வாங்கவும்... உங்கள் முதல் போகாது.

கிளி மூக்கு குஞ்சுகள் தேவை
ReplyDeletehttps://www.facebook.com/groups/1669452636632584/
ReplyDeletePrakash Integrated Farm
கிளி மூக்கு சேவல், கோழி, குஞ்சுகள்
ஐயா..திருநெல்வேலியில எங்க இது கிடைக்கும் சொல்லுங்கள்
ReplyDelete