February 15, 2017

நாட்டு கோழிகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல் : -

நாட்டு கோழிகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல் : -

கிராம புறம் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் இலவசமாக குடற்புழு நீக்க மருந்து கிடைக்கும் பெரிய கோழிகளுக்கு 5 ml , சிறிய கோழிகளுக்கு 3 ml, ஒரு மாத குஞ்சுகளுக்கு 1 ml, கொடுக்கலாம். 3 மாதம் ஒரு முறை மருந்து கொடுக்கவும் நேரடியாகவும் மருந்து கொடுக்கலாம்.
பயன்:- உடல் எடை அதிகரிக்கும், நோய் தாக்கம் குறையும்.
R 2 B/ RDVK தடுப்பு மருந்து கொடுக்கும் ஒரு வாரத்திற்கு முன்பே குடற்புழு நீக்க மருந்து அளிக்க வேண்டும். உருளை புழுக்களுக்கு எதிராக பைப்பரசின் பொருட்கள் ஆல்பென்ஸோல், மெபென்ட்சோல், போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அதே போல் நிக்ளோசைமைடு, ஆல்பென்ட் சோல் போன்றவை நடா புழுக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது.
குடற்புழு மருந்தை குடிநீர் வழியே கொடுக்கும் போது குறிப்பிட்ட அளவு மருந்தை குஞ்சுகளுக்கு 4 மணி நேரத்தில் குடிக்கும் நீர் அளவில் கலந்து கொடுக்கலாம். அதாவது 6 வார வயதுடைய 100 குஞ்சுகளுக்கு ஒரு நாளைக்கு 6 லிட்டர் நீரை முற்றிலுமாகக் கோழிகள் அருந்திய பின்னே மீண்டும் நீர்வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment