February 14, 2017

நாட்டு கோழி பண்ணையில் தோல்வியுற்ற நண்பர்களின் அனுபவங்கள் தேவை யாராவது இருக்கங்களா?

நாட்டு கோழி பண்ணையில் தோல்வியுற்ற நண்பர்களின் அனுபவங்கள் தேவை யாராவது இருக்கங்களா?

- ஒரு நண்பரின் கேள்விக்கு - பதில் அனைவருக்கும்

1. அனுபவமின்மை -அதாவது என்ன நோக்கத்திற்காக கோழியோ, ஆடோ, மாடோ, நாயோ வளர்க்கிறோம் என்பது முக்கியம்- சிறிய எண்ணிக்கையில் வளர்க்கும்போது பிரச்னை இல்லை. எளிதில் பராமரிப்பு செய்வதோடு, இழப்பு ஏற்பட்டாலும் பெரியதாக தெரியாது

2. சரி நான் பெரிய அளவில் தொழில் நோக்கோடு வளர்க்கும்போது சில சில பிரச்சனைகள் வரும். பெரிய அளவில் வளர்க்கும்போது முன் அனுபவம் கட்டாயம் வேண்டும் 

3. வேலை ஆட்களை நம்பி இருப்பதால் - அவர்கள் அதிக கவனத்தோடும் , லாப நோக்கோடும் வேலை செய்யமாட்டார்கள் , எதாவது பிரச்னை என்றால் அது முதலாளிக்கு தெரிந்தால் திட்டுவார்கள் அல்லது வேலையை விட்டு நிறுத்திவிடுவார்கள் என்ற எண்ணத்தில் உண்மையான பிரச்சனையை சொல்லமாட்டார்கள் -அதனால் இழப்பு ஏற்படும் 


4. லாபம் என்பது விற்கும்போது கிடைக்கும் பணத்தை வைத்து கணக்கிடுவது தவறு , லாபம் ஆரம்பித்தில் இருந்தே பெற சில முன் அனுபவங்களை பெற்றுருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக , குஞ்சுகள் 1 ரூபாய் குறைத்து வாங்கலாம் , கோழி வளர்க்கும் இடம் நல்ல சூழலாக இருந்தால் விரைவில் எடை கூடும், நோய்கள் வராமல் தடுத்து மருந்து செலவை மிச்சப்படுத்தலாம், வேலை ஆட்களின் எண்ணிக்கை குறைத்து லாபம் பெறலாம், குறைத்த நேர வேலை என்றால் ஆள் வைக்காமல் நாமே செய்து அதன் செலவை குறைக்கலாம் 


5. இன்றைய சூழலில் பண்ணை அமைப்பது , கோழி வளர்ப்பதோ முக்கியமில்லை அவைகளை விற்று பணம் சேர்ப்பதுதான் முக்கியம் 


6. கோழிவளர்ப்பில் உங்கள் நேரடி விற்கும் திறமை இருக்க வேண்டும்


7. கோழி முடி உதிராமல் வளர்த்தால் எளிதில் விற்று லாபம் பெறலாம் 


8. கோழியை 3 கிலோ , 4 கிலோ என வளர்க்காமல் 1.5kg - 2kg வரும்போதே விற்பனை செய்யவும், பெரும்பாலானோர் ரூ . 500 க்குள் தான் வாங்க நினைப்பார்கள் 


9. உங்க்களுக்காக இதை செய்யுங்கள் உங்களுக்கு அதிக அனுபவமும், தன்னம்பிக்கையும் கிடைக்கும் 


- காலையில் உங்கள் ஊர் வார சந்தைக்கு செல்லுங்கள், ஒரு 1 மணி நேரம் வியாபாரிகளை கவனித்து இருங்கள் , பிறகு ஒரு 500 -700 ரூபாய்க்கு கோழி வாங்குங்கள். அதனை அங்கேய் விற்றுப்பாருங்கள் - சிரமம் தெரியும், அனுபவம் கிடைக்கும் , லாபம் நஷ்டம் தெரியும். 


- இல்லை , இல்லை அது எனக்கு கவுரவ பிரச்சனை என்றால் , நிச்சியம்மா தொழில் செய்யமுடியாது 


லாபம் என்பது தொழிலில் வருவது மட்டும் இல்லை - தொழில் செய்யும்போது சிக்கனம் கடைப்பிடிப்பதும்(கஞ்சத்தனம் கூடாது ) செலவை மிச்சப்படுத்துவதும் ஆகும்.
Comment

No comments:

Post a Comment