தொடர் வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம் :
விவசாயத்துக்கான நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறுகிக் கொண்டே வருகிறது. எனவே விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடையும் பொருட்டு முற்றிலும் ஒரு புதிய அணுகு முறை தேவைப்படுகிறது. இப்புதிய அணுகுமுறையே ஒருங்கிணைந்த பண்ணையமாகும்.
ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் உதவிப் பேராசிரியர் (உழவியல்) பெ. முருகன் கூறியதாவது:
பயிர் சாகுபடியை மட்டும் நம்பி இருக்காமல் கறவை மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, காடை வளர்ப்பு, காளான் வளர்ப்பு ஆகிய உபதொழில்களை இணைத்து விவசாயத்தில் ஈடுபட்டால் கூடுதல் வருமானம் பெறலாம்.
ஒருங்கிணைந்த பண்ணையத்தின் முக்கியக் குறிக்கோள்கள் :
பண்ணையத்தின் மொத்த வருமானத்தை அதிகரித்தல், ஆண்டு முழுவதும் தொடர்ந்து வருமானத்துக்கு வழி ஏற்படுத்துதல், விவசாயத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளித்தல், பண்ணைப் பொருட்கள், பண்ணைக் கழிவுகளை சிறிய முறையில் சுழற்சி செய்தல், பண்ணையிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களை மீண்டும் வயலில் இட்டு நிலத்தின் வளம், மகசூலைப் பெருக்குவதோடு, உரச் செலவுகளைக் குறைப்பது போன்றவை.
ஒருங்கிணைந்த பண்ணையத்தின் அடிப்படைத் தத்துவங்கள் :
ஒருங்கிணைந்த பண்ணை முறையில் பண்ணைத் திட்டம் வகுக்கும்போது நன்செய், தோட்டக்கால், புன்செய் நிலங்களுக்கு ஏற்ற பயிர்த் திட்டத்தை அமைத்தல் வேண்டும். பின்பு அந்தப் பயிர்த் திட்டத்துக்கு ஏற்ப பொருளாதார ரீதியில் பலன் தரக்கூடிய ஒன்று அல்லது இரண்டு உபதொழில்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்து எடுக்கும் உபதொழில்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்க வேண்டும்.
அவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட உப தொழில்களுக்குத் தேவையான இடுபொருள்கள் அந்தப் பண்ணையிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். உபதொழிலுக்கு ஏற்ற இடுபொருள்கள் போதவில்லையெனில் அதற்கேற்றவாறு பயிர்த் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்.
மேலும் ஒரு உப தொழிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களை மற்றொரு உபதொழிலுக்கு இடுபொருளாக இருக்குமாறு உபதொழில்களைத் தேர்ந்து எடுக்க வேண்டும். பண்ணையில் விளையும் அல்லது தங்கள் ஊரில் கிடைக்கும் தானியங்களைக் கொண்டே தீவனக் கலவை தயார் செய்தல் வேண்டும். அப்போது தான் உபதொழில்களுக்கு ஆகும் உற்பத்தி செலவு குறைந்து அதிக லாபம் பெறலாம்.
ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் பயிர் சுழற்சியால் முதல் போகத்தில் நெல் பயிரிட்டு, இரண்டாம் போகத்தில் பயிறு, மூன்றாம் போகத்தில் பயிறு சாகுபடிக்கு மாற்றாக மக்காச்சோளம் ஆகியவற்றைப் பயிரிடலாம்.
கோழி வளர்ப்பு :
ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தில் மீன் வளர்ப்பு ஒரு அங்கமாக இருப்பதால் 10 சென்ட் மீன் குட்டைக்கும், மீதமுள்ள 90 சென்ட் பயிர் சாகுபடிக்கு ஒதுக்கலாம். இதில் இரண்டு போக நெல்லில் கிடைத்த பதர் நெல் தவிடு ஆக்கப்பட்டு கோழிக்குத் தீவனமாக பயன்படுத்தப்படலாம். இதே போல் மூன்றாம் போகத்தில் சேர்க்கப்பட்ட மாற்றுப் பயிரில் ஒன்றான மக்காச்சோளத்தையும் கோழித் தீவனத்துக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு பயிர் சாகுபடியில் கிடைத்த சில விளைபொருள்கள், கழிவு உபயோகத்தால் கோழித் தீவனச் செலவை சுமார் 70 சதவீதம் குறைக்க முடியும்.
மீன் குட்டையில் கோழி வளர்ப்பு :
கோழியின் கழிவு மீன்களுக்கு ஒரு சிறந்த உணவாகும். கோழியின் கழிவுகளில் 22 சதவீதம் புரதச் சத்தும், பாஸ்பரஸ், கந்தகம், தாமிரம், மாங்கனீசு போன்ற உலோகச் சத்துக்களும் 15 வகையான அமினோ அமிலங்களும் இருப்பதால் இது மீன் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது. மீன்களின் எண்ணிக்கைக்குத் தக்கபடி கோழிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டும். 400 கலப்பின மீன் குஞ்சுகளுக்கு 20 கோழிகள் போதுமானவையாகும்.
கோழிகளை 8-ஆவது வாரத்தில் விற்பனை செய்யலாம். மீன்கள் போதிய அளவிற்கு வளர்ச்சிப் பெற்று 6-வது மாதக் கடைசியில் விற்பனைக்குத் தயாராகும்.
சிப்பிக்காளான் வளர்ப்பு :
நெற் பயிரிலிருந்து கிடைக்கும் வைக்கோல், மக்காச்சோளக் கதிர்ச்சக்கை காளான் வளர்ப்பிற்கு இடுபொருளாக உள்ளது. இதனால் குறைந்த செலவில் காளான் உற்பத்தி செய்து அதிக வருமானம் பெற வாய்ப்பு உள்ளது.
ஆனால் உற்பத்தி செய்யும் காளான்களை அன்றன்றே விற்பனை செய்து விட வேண்டும்.
கறவை மாடு வளர்ப்பு :
மக்காச்சோளத்திலிருந்து கிடைக்கும் மணிகள், தட்டு மூலமாகவும் பசுந்தீவனங்கள் மூலமாகவும் விவசாயிகள் 2 முதல் 3 கறவை மாடு வளர்த்து அதிலிருந்து கிடைக்கும் பால் மூலம் அதிக வருமானம் பெறலாம்.
காடை வளர்ப்பு: 100 சதுர அடி பரப்பளவு கொண்ட அறைக்கு 500 காடைக் குஞ்சுகள் என்ற அளவில் வளர்த்தால் மாதம் ரூ. 4,000 முதல் ரூ. 5,000 வரை வருமானம் பெறலாம்.
நெல் வயலில் மீன் வளர்ப்பு :
வடகிழக்கு பருவமழை காலத்தில் நடுத்தர, அதிக வயதுடைய ரகங்களான வெள்ளைப் பொன்னி, பாப்பட்லா, ஆடுதுறை 49 ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.
ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்ய குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை செலவாகிறது.
நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்கும், நெல் சாகுபடி செய்யும் நிலங்களில் அதிக வருமானம் பெற நெல் வயலில் மீன் வளர்ப்பு உதவிகரமாக இருக்கும்.
இந்தத் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிப்பதால் நெல் வயலில் உள்ள களைகளை கட்டுப்படுத்துவதுடன் பூச்சிகளின் தாக்குதலையும் குறைக்கலாம்.
மீன் கழிவுகள் வயலுக்கு உரமாகவும், 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தும். வடகிழக்கு பருவமழை காலத்துக்குப் பின் சம்பா, தாளடி பருவத்தில் இந்த தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்கலாம். நெல்லுடன் மீன்வளர்ப்புக்கு வெள்ளைப் பொன்னி, பாப்பட்லா, ஆடுதுறை 49 ரகங்கள் மிகவும் ஏற்றவை.
நெல் வயலின் வரப்பைச் சுற்றி 1 மீட்டர் ஆழமும், 1 மீட்டர் அகலமும் கொண்ட கால்வாய் அமைத்து அதில் மீன்களை வளர்க்கலாம்.
நெல் வயலில் கால்வாயை விட்டுவிட்டு மற்ற நடு பகுதியில் நெல்பயிர் நாற்றை வரிசைக்கு வரிசை 25 செ.மீ, செடிக்கு செடி 25 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு அதிக இடைவெளியில் நடவு செய்வதால் மீன்கள் வயலின் நடுபகுதிகளுக்கு சென்று இறைத் தேட வசதியாக இருக்கும். நெல் வயலில் நீர்விடும் பகுதி, நீர் வெளியேற்றம் பகுதியில் வலைகள் அமைத்து மீன்கள் தப்பிச் செல்வதைத் தடுக்க வேண்டும்.
நெற்பயிர் நடவு செய்தவுடன், நெல்வயலில் 5 செ.மீ. முதல் 10 செ.மீ. நீர் அளவு இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். நெல் நடவு செய்யப்பட்டு 5 நாள்கள் கழித்து ஏக்கருக்கு 100 கிலோ அசோலாவை வயலில் இடவேண்டும். இவ்வாறு செய்வதால் நெற்பயிறுக்கு தழைச்சத்து கிடைப்பதுடன், அது மீன்களுக்கு நல்ல உணவாகவும் இருக்கும்.
நெல் நடவுக்குப் பின் 15 நாள்கள் கழித்து ரோகு, கட்லா, மிர்கால் போன்ற மீன் குஞ்சுகளை ஏக்கர் ஒன்றுக்கு 1,000 முதல் 1,200 வரை கால்வாயில் இருப்பு செய்யலாம்.
வாரம் ஒரு முறை மாட்டுச் சாணம், கிளைரிசிடியா தழைக் கட்டுகளை நெல் வயலில் உள்ள கால்வாயில் போட வேண்டும். இது மீன்களுக்கு சிறந்த உணவாகும்.
மேலும் வயலில் உள்ள அசோலா, களைகள், நெற்பயிறுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் (விளக்கு பொறி வைப்பதால்) மீன்களுக்கு இறையாக கிடைக்கின்றன. நெல் வயலில் மீன்கள் வளர்க்கும்போது ரசாயன பூச்சிக் கொல்லிகள் தெளிக்க கூடாது. இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் மருந்துகளான வேப்ப எண்ணெய், பஞ்ச காவ்யா, இழைச்சாறு ஆகியவற்றை தெளிக்கலாம். நெல் முதிர்ச்சி பருவத்தில் நெற்பயிரின் நடுவே நீர் பாய்ச்சுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் கால்வாயில் மட்டுமே நீர் நிறுத்த வேண்டும். நெல் அறுவடை செய்தவுடன் கால்வாயில் உள்ள நீரை வடிகட்டி விட்டு மீன்களைப் பிடித்து விற்பனை செய்யலாம். நெல் வயலில் இருப்பு செய்யப்பட்ட மீன்கள் 5 மாதத்தில் 500 கிராம் முதல் 600 கிராம் வரை எடை கொண்டவையாக வளரும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு செய்வதால் ஒரு ஏக்கருக்கு 400 கிலோ முதல் 500 கிலோ வரை மீன்களைப் பெறலாம்.
மேலும், விவரங்களுக்கு, காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தை 044 - 2745237 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

No comments:
Post a Comment