February 14, 2017

நாட்டு கோழிகள் மேய்ச்சல் முறை தீவன மேலாண்மை எனக்கு தெரிந்தது மற்றும் செய்வது.

நாட்டு கோழிகள் மேய்ச்சல் முறை தீவன மேலாண்மை எனக்கு தெரிந்தது மற்றும் செய்வது.

1.நிலத்தில் 4 இடத்தில பசுசாணம் குப்பைகள் உள்ளது, வாரம் ஒரு முறை ஈரப்படுத்துகிறேன் குப்பைகள் மற்றும் நிலத்தில் உள்ள புள் புழுக்கள் போதுமானதாக உள்ளது தற்போதைக்கு.

2.நம்மிடம் உள்ள நிலத்தை பகுதிகளாக பிரித்து 20 நாட்களுக்கு ஒரு பகுதி மேனிக்கு கீரைகள் மற்றும் தீவனங்கள் பயிர் செய்து மேய விடுவது அந்த 15-20 நாட்கள் அந்த பகுதிக்குள் கோழிகள் செல்லத்தவாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.

3.மற்ற நிலத்தை வாரம் ஓரிரு முறை இரவு நேரங்களில் sprinklar மூலம் ஈரப்படுத்துவது புழுக்கள் உருவாவதற்கு.

4.அடைவதற்கு முன்பு உங்களுக்கு தீவனம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் உலர் தீவனம் கொடுத்தால் இரவு நேரத்தில் தீவனம் செரிக்க நேரம் எடுத்து கொள்ளும் அதே நேரத்தில் எடையும் கூடும்.

5.தானியங்களை ஊறவைத்து முலைகட்டி பச்சையாக மாறுவதற்கு முன்பு தர வேண்டும் ஏனெனில் ஏற்கனவே நிலத்தில் அவைகளுக்கு பச்சை உண்ணுகிறது, எல்லா நேரமும் கீரைகள் புள் பச்சை உண்ணாது தோராயமாக 25% எடுத்து கொள்ளும், மீதி புழுக்கள் மற்றும் உலர் தீவனங்கள், இந்த முறையில் தானியங்கள் அளவு பெருக்க படுகிறது உதாரணத்திற்கு ஒரு கிலோ கோதுமை முலைகட்டினால் தோராயமாக 4-5 வரும்.

5.மேய்ச்சல் நிலம் குறைவாக இருப்பவர்கள் hydroponics முறையில் பயிர் செய்து கோழிகளுக்கு தரலாம்.(இந்த முறை இன்னும் முயற்சி செய்யவில்லை காரணம் தேவைப்படவில்லை இது வரை, தேவை பட்டால் முயற்சி செய்கிறேன்.)

நன்றி,
சிவா
85550 04274

1 comment:

  1. நான் எதிர் பார்த்த தகவல் மிக அருமை

    ReplyDelete