February 15, 2017

புதிதாக நாட்டுக்கோழி பண்ணை அமைக்க எவ்வளவு செலவு ஆகும் என்று நண்பர் ஒருவரின் பகிர்தல்

புதிதாக நாட்டுக்கோழி பண்ணை அமைக்க எவ்வளவு செலவு ஆகும் என்று நண்பர் ஒருவரின் பகிர்தல்

இதில் சில மாற்றங்கள் இருக்கலாம் உங்கள் ஊரின் விலை நிலவரப்படி
இந்த பட்டியல் சிறுவிடை கோழியை வைத்து போடப்பட்டது
100 தாய் கோழி (சிறுவிடை)வளர்க்க முதலில்
400 கோழி குஞ்சுகள் வாங்க வேண்டும்
இதில் 40% கோழியும் 60% சேவலும் இருக்கும்
இல்லை என்றால் 60% கோழியும் 40% சேவலும் இருக்கும்
இவற்றில் 50 இறந்து விட்டால் மீதி 350 கோழி குஞ்சு
இவை மூன்று மாதம் வளர்ந்த பிறகு தரமான 100 கோழியையும் 25 சேவலையும் தனியாக பிரித்து வளர்க்கவேண்டும் மீதி உள்ள 225 கோழியையும் 6 மாதத்தில் விற்பனையை செய்துவிடலாம் எப்படியும் ஒரு கோழி 1 1/2 கிலோ எடை வரும்
400 கோழி குஞ்சு : 20,000/-
இறப்பு. 50/-
தீவணம் 1 கோழிக்கு 3 மாதம்வரை அதிகப்படியான தீவணம் 4 கிலோ
1 கிலோ 30
350*4=1400*30= 42,000/-
125 தாய் கோழிக்கு கொட்டகை அமைக்க 1சதுர அடிக்கு 150₹
அப்படி என்றால் 400சதுரடிக்கு :60000
(400சதுரஅடி தேவை 100 தாய் கோழிக்கு)
மொத்தமாக 122000 தேவை
இதில் தீவணத்தை மாதம் மாதம் வாங்கிக்கொள்ளலாம் அரம்பத்தில் மிக குறைவாகத்தான் ஆகும் தீவண செலவு நான் பதிவு செய்திருப்பது மிக அதிகம்
225 கோழியை 6மாத்த்தில் விற்பனை செய்வதில் நமக்கு 60000₹ கிடைக்கும்
225*1 1/5 கிலோ *180
= 60750
இதில் கோழி விலை 180 என்று மிக குறைவாகத்தான் பதிவு செய்துள்ளேன்
அதன் பிறகு தாய்கோழியில் இருந்து முட்டை கிடைக்கும் அதில் இருந்து குஞ்சு உற்பத்தி செய்யவேண்டும்
ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 40 முட்டைகள் கிடைக்கும்
கோழி மேய்ச்சலுக்கு தேவையான இடம் உங்களிடம் இருக்க வேண்டும்
நன்றி
தமிழ் செல்வன் சகோ

No comments:

Post a Comment