February 14, 2017

கோழிகள் அதன் முட்டை உடைத்து குடித்து கொள்கிறதா?

கோழிகள் அதன் முட்டை உடைத்து  குடித்து கொள்கிறதா?

முட்டை உடைத்து குடிப்பது எதிர்பாராமல் நடப்பது கோழி அடைல உட்காரும் போது கால் பட்டு முட்டை உடைய வாய்ப்பு அதிகம், உடைந்த முட்டையை தான் முதலில் ருசி பார்க்கிறது அது பிடித்து போகவே அடிக்கடி தானாக உடைத்து குடிக்க ஆரம்பித்து விடுகிறது, இதை மற்ற கோழிகள் பார்த்தால் ஆபத்து அவைகளும் அதே போல செய்ய நேரிடலாம்.

முட்டைகளை உடைப்பதற்கான மற்ற காரணங்கள், காரணங்களுக்கு தகுந்த வசதிகள் செய்து தர வேண்டும்.

1. அடை கலனில் தேவையான இட வசதி இல்லாதது.
2.அடைல இருக்கிற கோழிகளுக்கு தாகம் அதிகம் எப்பொழுதுமே அருகில் சுத்தமான குடிநீர் இருக்கு படி பார்த்து கொள்ள. வேண்டும்.
3.அடைல இருக்கிற கோழி அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் அதனால் பசியும் இருப்பதால், தேவையான தீவனம் அடைல இருக்க வேண்டும்.
4.தேவையான சத்து தீவனம் கிடைக்காததால்.
5.கோழிகளுக்கு bore அடிப்பதால். கோழி முன்னாடி கீரை, காய்கறிகள்,கோஸ் போன்றவை கட்டி தொங்க விடலாம்.
6.அதிகமான வெளிச்சம், அடைல இருக்கிற இடம் இருட்டாக இருக்க வேண்டும்.
7.மண அழுத்தம், கோழி அடைல இருக்கிற இடத்திற்கு மனிதர்கள் மற்ற விலங்குகள் அடிக்கடி செல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
8.கன்னி வெடை கோழிகள் அனுபவம் இல்லாமல் தெரியாமலும் உடைத்து குடிக்கும்.
நன்றி,
http://facebook.com/mokshafarms

No comments:

Post a Comment