February 14, 2017

எனக்கு ஒரு சந்தேகம், நாம் மேய்ச்சல் முறையில் கோழிகள் வளர்க்கிறோம்,

எனக்கு ஒரு சந்தேகம், நாம் மேய்ச்சல் முறையில் கோழிகள் வளர்க்கிறோம்,

இருந்தாலும் சந்தை தீவனங்கள் மற்றும் தீவனங்கள் அரைப்பது பற்றி பேசுகிறோம்.
நம்மிடம் உள்ள மேய்ச்சல் நிலத்தில், முடிந்த அளவு தீவனங்கள் கோழிகளுக்கு கிடைக்கும் படி செய்ய வேண்டும், மற்றும் நம்மிடம் உள்ள தானியங்களை உளர் தீவனங்களாகவும் முளைகட்டிய தனியங்களாகவும் போதுமானது என்பது என்னுடைய கருத்து.
நாம் கொடுக்கும் தீவனம் மாலையில் அடைவதற்கு முன்பு ஒரு முறை கொடுக்கும் முறை பின்பற்ற வேண்டும்,பகல் முழுவதும் மேய்ச்சல் நிலத்தில் உள்ள பசுந்தீவனங்கள், கீரைகள்,கண்டிப்பாக ஒரு ஆடு/மாடு சாணம் குப்பை அவசியம் இருக்க வேண்டுமென்பது என்னுடைய கருத்து அது புழுக்களுக்கு மட்டும் அல்ல சாணியை கிளறும் போது நோய் எதிர்ப்புசக்தி கூடும், சண்டையிடும் குணம் குறையும்.
சரியான தீவணமேலாண்மையும் நோய் மேலாண்மையும் தெரிந்தால் நாட்டு கோழி வளர்ப்பில் வெற்றியடையலாம்.
உங்களுக்கு இந்த தளத்தில் உள்ள பதிவுகள் பிடித்திருந்தால் like செய்யவும் மற்றும் நண்பர்களிடம் share செய்யும்படி கேட்டு கொள்கிறோம்.
நன்றி,
சிவா
85550 04274

No comments:

Post a Comment