February 15, 2017

ஆண்டுக்கு 230 முட்டையிடும் கிராமப்பிரியா 110 முட்டையிடும் வன ராஜா கோழி

ஆண்டுக்கு 230 முட்டையிடும் கிராமப்பிரியா 110 முட்டையிடும் வன ராஜா கோழி

திருச்சி: ஐதராபாத்தில் உள்ள கோழி திட்ட இயக்குனரகம், கிராமப் பிரியா (முட்டைரகம்), வனராஜா (முட்டை மற்றும் இறைச்சி ரகம்) என்ற இரு கோழி ரகங்களை உருவாக்கியது. பார்ப்பதற்கு நாட்டு கோழிகளை போன்ற தோற்றமுடைய இக்கோழிகள், நாட்டு கோழிகளை விட அதிக எண்ணிக்கையில் முட்டையிடக் கூடியவை. முதலில் இக்குஞ்சுகள், தடுப்பூசிகள் மற்றும் உரிய தீவனங்களுடன் அடை காப்பானில் 6 வார கால தொடர் செயற்கை வெப்பத்தில் பராமரிக்கப்படுகின்றன. பின்னர் புறக்கடை வளர்ப்புக்கு ஈடுபடுத்தப்படுவதால் கோழிகளே உணவு தேவையை எளிதில் பூர்த்தி செய்து கொள்கின்றன. இதன் மூலம் அதிக எடையையும், அதிக முட்டையிடும் திறனையும் கோழிகள் பெறுகிறது.

அதாவது ஒன்றரை ஆண்டில் கிராமப் பிரியா ரக கோழி 200 முதல் 230 முட்டைகளும், வனராஜா ரக கோழி 100 முதல் 110 முட்டைகளும் கொடுக்கிறது. கோழிகளின் எடையும் அதிகம் என்பதால் 2.2 கிலோ வரை இறைச்சியும் கொடுக்க வல்லது. இவ்வகை கோழிகளை வளர்க்க, குறைந்த முதலீடே போதுமானதாகும். இதனால் கோழி விதை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்க திருச்சி கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ஈடுபட்டுள்ளது.

கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் ரிச்சர்டு ஜெகதீசன், உதவி பேராசிரியர் மருத்துவர் ஷிபிதாமஸ் ஆகியோர் கூறுகையில், புரதசத்து அதிகமுள்ள முட்டையை சீராக எடுத்துக் கொள்ளாததால் இன்று பல கிராமங்களில் கர்ப்பிணிகளும், வளரும் குழந்தைகளும் புரத பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். இதற்கான சிறந்த தீர்வாக கிராமப்பிரியா, வனராஜா ஆகிய கோழி ரகங்கள் அமையக்கூடும்.

மக்கள் பயன்பெறும் வகையில் இந்த கோழிக்குஞ்சுகளை விவசாயிகளுக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம். திருச்சி மண்டலத்திற்குட்பட்ட விவசாயிகள் திருச்சி, கால்நடை பயிற்சி மையத்தில் இதற்கான முன்பதிவை செய்து கொள்ளலாம் என தெரிவித்தனர்.

கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திருச்சி - 0431¬2770715
வன ராஜா கோழி க்கான பட முடிவு

www.facebook.com/pages/வாங்க-விற்க/563035333829934

No comments:

Post a Comment